பக்கம் எண் :


258 திருப்புகழ் விரிவுரை

 

விரிவுரை

மைக்கணிக்கன் வாளி போல:-

மை கண் இக்கன் வாளி. இக்கு-கரும்பு. கரும்பு வில்லையுடைய மன்மதன் இக்கன். விலைமாதர்களின் மைபூசிய கண்கள் மன்மதனுடைய மலர்களைப் போல் கொடுமை செய்ய வல்லவை.

உள்களத்தை மாறிநாடி:-

கள்ளத்தை என்ற சொல் களத்தையென வந்தது. மனத்துக்குள் உள்ள திருட்டுத்தனத்தை வெளிக்குக் காட்டாமல் மறைத்து வைத்து, விரும்புவதுபோல் நடிப்பர்.

மட்டுமுற்ற கோதை போத முடிசூடி:-

மட்டு-தேன், வாசனை, கோதை-பூமாலை. போத-செவ்வையாக

இக்கு வைக்கு மாடை:-

இக்கு-தடை. தடையாயுள்ள ஆடை.

இசைபேசி:-

இசைதலைப் பேசி உறவாடுவர்.

பக்க சூல:-

பக்கம்-பகுப்புற்ற-மூன்று பிரிவாகவுள்ள சூலம்.

செக்கை:-

செங்கை எனும் கூத்து. நூற்றெட்டுக் கரணம் உடையது.

மாறுதாரம்:-

மாறுதாரம்-மறுவுத்தரம்.

விக்குமூடு:-

விக்கம்-வீக்கம்-கர்வம்.

“கடல் இலங்கைக் கோமான் தன்னை
   வீக்கம் தவிர்த்த விரலார்”         - அப்பர்
.

திக்கமுட்டி:-

திக்க-பல வழியாகச் சிதறுமாறு

செப்பு வெற்பு:-

செப்பு வெற்பு-பொதியமலை.

“செம்புடற் பொதிந்த தெய்வப் பொதியமும்”
   “தென்கால் விடுக்கும் செம்பிற் பொருப்பு”      - கல்லாடம்..