பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 259

 

கருத்துரை

பொதிகமலை மேவு வடிவேலா! மாதராசையால் மானக்குறைவு அடையாமல் காத்தருள்வீர்.

182

வெடித்த வார்குழல் விரித்து வேல்விழி
விழித்து மேகலை பதித்து வார்தொடு
மிகுந்த மாமுலை யசைத்து நூலின்ம     ருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கியேவளை
துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு      தந்தவாய்நீர்
குடித்து நாயென முடக்கு மேல்பிணி
யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
குலத்தர் யாவரு நகைக்க வேயுடல்      மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்
கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
கொடுத்து வேதமு மொருத்த னாமென       சிந்தைகூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொடோவென
திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி     ரங்குபோரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ      ரும்பராரை
அடைத்த மாசிறை விடுத்து வானுல
களிக்கு மாயிரதிருக்க ணாரை
சளித்து நாளுமெ னுளத்தி லேமகி      ழுங்குமாரா
       அளித்த தாதையு மிகுத்த மாமனும்
அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
அகத்ய மாமுனி பொருப்பின் மேவிய      தம்பிரானே.

பதவுரை

உடுட்டு டூடுடு டுடுட்டொ டோஎன-உடுட்டு டூடுடு டுடுட்டொடோ எனவும், திகுத்த தீதிகு திகுர்த்த என-திகுத்த தீதிகு திகுர்த்த எனவும், உடுக்கை, பேரிகை தவில் குழாமும்-உடுக்கை பேரிகை தவில் இவை