பயனில் சொல்பாராட்டுவானை மகனெனல் மக்கட்பதடி யெனல் - திருக்குறள் தபோதனர்:- வீண் வார்த்தை பேசாத முனிவர் பயனுடைய சொற்களையே பகர்வார்கள். அடியேனை இராகமும் விநோதமு முலோபமுடன் மோகமு மிலானிவனுமா புருஷ னெனஏய:- தவமுனிவர்கள் என்னைப் பார்த்து “இவன் ஆசை, களியாட்டம், உலோபம், மோகம் முதலிய குற்றங்கள் இல்லாதவன்; உத்தமமான சிறந்த புருஷன்” என்று புகழ வேண்டும். பெரியோர்களால் பாராட்டப்பட வேண்டும். மநோலய சமாதிய நுபூதி பெற:- அஷ்டாங்க யோகத்தில் சமாதி எட்டாவது படி. அங்கு மநோலயம் உண்டாகும். “பகரொணாதது சேர வொணாதது நினையொ ணாதது வானதயாபர பதியதான சமாதி மநோலயம் வந்து தாராய்” - (தறையின்மா) திருப்புகழ். நிலாவிரி நிலாமதி:- நிலா - சந்திரிகை.அமிர்த சீத ஒளியை உலகெங்கும் பரப்புகின்ற சந்திரன். நிலாதவ நிலாசன:- நிலாத அநில அசன. எங்கும் நில்லாமல்அலைகின்ற காற்றை ஆகாரமாகக் கொள்ளும் பாம்பு. பாம்புக்கு காற்று ஆகாரம். “காலே மிகவுண்டு காலே இலாத கணபணம்” -கந்தரலங்காரம் (41) நியாய பரிபால அரு:- அர - பாம்பு;இது ஆதிசேடனைக் குறிக்கின்றது. ஆதிசேடன் நாகராஜன். சிறந்த நியாயத்தைப் பரிபாலிக்கன்றவன். நல்ல அறிஞன். அறப்பண்புள்ளவன். ஆதிசேடனைச்சிவபெருமான் நாகாபரணமாக அணிந்திருக்கின்றார். “வாயுவான பஞ்சடைத்துத் திருமால் துயிலும் மலரணையே ஆயவிடமாம் யாக்கையமைத் தரனார் அணியும் அரும்பணியே” - செவ்வந்திப்புராணம். |