பக்கம் எண் :


260 திருப்புகழ் விரிவுரை

 

களின் கூட்டம், இரங்கு போரில்-ஒலிக்கின்ற போர்க்களத்தில், உலுத்த நீசர்கள் பதைப்ப-உலோபிகளாகிய அசுரர்கள் பதை பதைக்கவும், மாகரி துடிப்ப-பெரிய யானைகள் துடிக்கவும், நீள் கடல் எரித்து-நீண்ட கடலை எரித்து, சூர் மலை உடைத்து-சூரனையும், கிரவுஞ்சமலையையும் பளிந்து, நீதிகள் பரப்பு நீதி நெறிகளை எங்கும் பரவச் செய்து, அவர் உம்பாராரை-அந்த அசுரர்கள் தேவர்களை, அடைத்த மாசிறைவிடுத்து, அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும், விடுவித்து, அவான் உலகு அளிக்கும்-ஆயிரங்கண்ணனாகிய இந்திரனுக்கு தேவலோக ஆட்சியைத் தந்தருளி, நாளும் என் உளத்திலே மகிழும் குமாரா-நாள்தோறும் அடியேனுடைய உள்ளத்தில் இருந்து மகிழும் குமாரக் கடவுளே! அளித்த தாதையும்-ஈன்ற தந்தையாகிய சிவமூர்த்தியும், மிகுந்த மாமனும்-அன்புமிகுந்த மாமனாகிய திருமாலும், அனைத்து உளோர்களும் மதிக்கவே மகிழ-மற்ற எல்லோரும் மதிக்கும்படி மகிழ்ச்சியுடன், அகத்திய மாமுனி பொறுப்பில் மேவிய-அகத்திய மகாமுனிவருடைய, மலையாகிய பொதியமலையில், வீற்றிருக்கும், தம்பிரானே! தனிப்பெருந்தலைவரே! வெடித்த வார் குழல் விரித்து-வேல்போன்ற கண்களை அப்படியும் இப்படியுமாக விழித்தும், மேகலை பதித்து-இடையணியை யணிந்தும், வார்தொடு மிகுந்த மாமுலை அசைந்து-இரவிக்கை யணிந்த மிகப் பெரிய தனங்களை அசைத்தும், நூலின் மருங்கின் ஆடை மினுக்கி-நூல்போன்ற மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், ஓலைகள் பிலுக்கி-காதில் உள்ள தங்க வோலையை விளக்கியும், வளைதுலக்கியே- வளையலை ஒளி பெறச் செய்தும், இள நகைத்து-இளநகை செய்தும், கீழ்விழி மிரட்டி-கீழ்க்கண்ணால் மிரட்டியும், யாரையும் அழைத்து-யாரையும் வாரும் என அழைத்து, மால் கொடு தந்த வாய் நீர் நாய் என குடித்து-ஆசை கொண்டு கொடுத்த வாயிதழ் ஊறலை நாய்போல் குடித்து, முடக்கம் ஏழ்பிணி அடுத்து-முடக்கத்தைதரும் நோய்கள் பல சேர்ந்து, உபாதிகள் படுத்த-வேதனகைள் உண்டாக்க, தாய் தமர் குலத்தார் யாவரும் நகைக்க-தாயார் சுற்றத்தார் குலத்தினர் முதலிய அனைவரும் அடியேனைக் கண்டு சிரிக்க, உடல் மங்குவேனை - உடல் வாடுகின்ற சிறியேனை, குறித்து-தேவரீர் கவனித்து, நீ அருகு அழைத்து-நீர் உமது அருகில் அழைத்து, மாதவர் கணத்தில் மேவு என-சிறந்த தவமுனிவர்களின் கூட்டத்தில் சேர்வாயாக என்று, அளித்து-எனக்கும் அருள் புரிந்து, வேல் மயில் கொடுத்து-வேல் மயில் இவற்றின் அடையாளங்களை என்தோளில் பொறித்து, வேதமும் ஒருத்தனாம் என- வேதமும் என்னை இவன் ஓர் ஒப்பற்றவன் என்று உரைக்கும்படி, சிந்தைகூராய்- திருவுள்ளத்தில் கருணை கூர்ந்து அருளுவீராக.