பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 261

 

பொழிப்புரை

உடுட்டு டூடுடு டுடுட்டொடோ எனவும், திருத்த தீதிகு திகுர்த்த தா எனவும் உடுக்கை பேரிகை தவில் முதலிய வாத்தியக் கூட்டங்கள் ஒலிக்கும் போர்களத்தில், உலோபிகளான அசுரர் பதைபதைக்கவும், பெரிய யானைகள் துடிதுடிக்கவும், நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்சத்தையும் பிளந்து, எங்கும் நீதி நெறிகளைப் பரவச்செய்து, அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்துவைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, விண்ணுலக ஆட்சியை இந்திரனுக்கு வழங்கி நாள்தோறும் அடியேன் உள்ளத்திலேயே மகிழ்ந்து இருக்கும் குமாரக் கடவுளே! பெற்ற தந்தையாம் சிவமூர்த்தியும், அன்புமிகுந்த மாமனாம் நாராயணமூர்த்தியும் ஏனையோர்களும் மதித்துப் போற்ற, மகிழ்ச்சியுடன் அகத்திய தலைவரே! நறுமணங் கமழும் நீண்ட கூந்தலை விரித்தும், வேல் போன்ற கண்களை இப்படியும் அப்படியுமாக விழித்தும், இடையணியை யணிந்தும், கச்சணிந்த மிகப்பெரிய தனங்களை அசைத்தும், நூல்போன்ற மெல்லிய இடையில் ஆடையை அழகு படுத்தியும், காதோலையை விளக்கியும், வளையல்களை ஒளிபெறச் செய்தும், இளநகை செய்தும், கீழ்க்கண்ணால் மிரட்டியும், யாரையும் வாரும் என அழைத்து, அப்பொது மாதர் கொடுத்த வாயிதழ் ஊறலை நாய் போல் குடித்து, முடக்குவாதம் முதுலிய நோய்களின் வேதனைகளும் உண்டாக, தாயும் சுற்றத்தாரும், குலத்தவரும் சிரிக்க உடல் வாடுகின்ற என்னை, கவனித்து, உமது அருகில் அழைத்து, மாதவர்களின் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள்புரிந்து, வேல் மயில் அடையாளங் களை என்மீது பொறித்து, வேதமும் என்னை இவன் ஒப்பற்றவன் என்று கூறும்படி உமது திருவுள்ளத்தில் கருணை கூர்ந்து அருளுவீராக.

விரிவுரை

வெடித்த வார்குழல் விரித்து:-

வெடித்த-நறுமணங்கமழ்கின்ற பொதுமாதர் நடுவீதியில் நின்று கூந்தலை விரித்துக் கோதி அதன் வாசனை வீச, மோகவலை வீசுவார்கள்.

“அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவார்
அன்பு கொண்டிடநீரோ போரீர்       - திருப்புகழ்.