பக்கம் எண் :


264 திருப்புகழ் விரிவுரை

 

அத்துணை நேரங்கூட இந்த உடம்பு நிற்காது. யாக்கை ஒரு கணத்தில் தோன்றி மறைவது.

கல்லினேர அ வழிதோறும்:-

கல்லும் முள்ளும் நிறைந்த வழிபோல் மாயையின் வழி கடினமானது. ஆதலால் அவ்வழி சென்று அலைதல் கூடாது.

கையும் நானும் உலைலாமோ?:-

கை-ஒழுக்கம்.

சொல்லி நேர்படு முதுசூரர்:-

சூரபன்மனும் அவனுடைய சேனாவீரர்களும் தத்தம் பராக்கிரமங்களை வீர வசனத்தால் முழக்கிக் கொண்டு போருக்கு வந்தனர்.

வல்லிமாரிரு புறம்:-

வனவல்லி-வள்ளி. கஜவல்லி-தெய்வயானை. வள்ளி வலப்பக்கம். தெய்வயானை இடப்பக்கம்.

“ஆராத காதல் வேடர்மடமகள்
ஜீமூதமூர்வலாரி மடமகள்
ஆதாரபூதமாக வலமிடம்   உறைவாழ்வும்” - (சீரான) திருப்புகழ்.

வள்ளிபூர்:-

வள்ளியூர் திருநெல்வேலிக்குத் தெற்கே நாகர் கோயில் போகும் வழியில் 28ஆவது மைலில் உள்ள திருத்தலம். பஸ்வசதி உண்டு. மலையடிவாரத்தில் கோயில் உள்ளது.

கருத்துரை

வள்ளியூர் வடிவேலா! மாயை வழியிற் சென்று அலையாமல் ஆண்டருள்வீர்.

கதிர்காமம்

184

திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப்    பெருமாள்காண்
ஜெகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப்     பெருமாள்காண்
மருவுமடி யார்கள்மனதில் விளையாடு
மரகத மயூரப்     பெருமாள்காண்