பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 265

 

மணிதரளம் வீசி யணியருவி சூழ
மருவுகதிர் காமப்    பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத விரப்     பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர்குரு நாதப்     பெருமாள்காண்
இருவினையி லாத தருவினை விடாத
இமையவர்க்கு லேசப்   பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப்    பெருமாளே.

பதவுரை

இலகு சிலை வேடர் கொடியின்-விளங்குகின்ற வில்லைத் தாங்கியுள்ள வேடர் குடியிற் தோன்றிய கொடிபோன்ற மென்மையுடையராகிய வள்ளியம்மையாரின், அதிபார இருதன விநோத-மிகவும் பருத்துள்ள இரண்டு தனங்களிலும், பொழுது போக்கும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவராகிய முருகக்கடவுளை, திருமகள் உலாவும்-இலக்குமிதேவி வாழ்கின்ற, இருபுய-இரண்டு புயமலைகளையுடையவரும், முர அரி-முரன் என்ற அசுரனை அழித்தவரும், ஆகிய திருமாலினது, திருமருக நாமப் பொருமாள் காண்-சிறந்த மருகர் என்ற திருப்பேரையுடைய பெருமானென்னு அறிவாயாக, செகதலமும்-மண்ணுலகமும், வானும்-விண்ணுலகமும், மிகுதிபெறு பாடல்-மிகுதியான அருட்பாடல்களால் ஆராய்ந்து, தெரிதரு குமார பெருமாள்காண்- அறிந்து கொள்ளத்தக்க குமாரக்கடவுள் என்று அறிவாயாக; மருவும் அடியார்கள்- திருவருள் நெறியில் கலந்துள்ள அடியவர்களின், மனதில் விளையாடும்-உள்ளக் கமலத்தில் திருவிளையாடல் புரிகின்ற, மரகத மயூர பெருமாள்காண்-மரகத நிறம் போன்ற பச்சை மயில் வாகனக் கடவுள் என்று அறிவாயாக; மணிதரளம் வீசி அணி- இரத்தின மணிகளையும் முத்துக்களையுங் கொழித்து எறிந்து திருவடியில் அணிகின்ற, அருவி சூழ மருவு-மாணிக்க நதியென்னும் அருவி சூழப் பொருந்தியுள்ள, கதிர்காம பெருமாள்காண்-கதிர்காமம் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள, பெருமான் என்று அறிவாயாக; அருவரைகள்-சிறந்த மலைகள், நீறுபட-துகள்பட்டு ஒழியவும், அசுரர் மாள-சூராதி யவுணர்கள் மாண்டு அழியவும், அமர்பொருத-போர் புரிந்த வீர பெருமாள்காண்-வீரமூர்த்தியென்று அறிவாயாக; அரவு-பாம்பும், பிறை- பிறைச்சந்திரனும், வாரி-கங்கையும், விரவு சடை வேணி-கலந்து வாழ்கின்ற சடைமுடியை யுடையவரும், அமலர்-