அனாதி மலமுத்தருமாகிய சிவபெருமானுக்கு, குருநாதப் பெருமாள்காண் - குருமூர்த்தியாக இருந்து உபதேசித்த பெருமான் என்று அறிவாயாக; இருவினை இலாத-நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளிலும் நடுநிலை பெற்றவர்களும், தருவினை விடாத-கொடுக்கின்ற தொழிலை விடாதவர்களுமாகிய, இமையவர்- தேவர்களுடைய, குல ஈச பெருமாள்காண்-கூட்டத்திற்குத் தலைவர் என்று அறிவாயாக. பொழிப்புரை விளங்குகின்ற வில்லைத் தரித்த வேட்டுவர் குடியில் அவதரித்த கொடிபோன்ற மெல்லியலையுடைய வள்ளியம்மையாருடைய மிகவும் பருத்துள்ள இரு தனங்களிலும் பொழுது போக்குபவராகிய பெருமிதமுடைய முருகக் கடவுளை, இலக்குமி தேவி வாழ்கின்ற இரண்டு புயாசலங்களை யுடையவரும், முரன் என்ற தானவனை வதைத்தவருமாகிய நாராயணமூாத்தியின் திருமருகர் என்ற திருநாமத்தையுடைய பெருமான் என்றும், மண்ணுலகமும், விண்ணுலகமும், துதிசேய்கின்ற மிகுதியான அருட்பாடல்களால் ஆராய்ந்து அறிதற்குரிய குமார பரமேசுவரர்! என்றும், திருவருள் நெறியில் கலந்துள்ள மெய்யடியார்கள் உள்ளக் கோயிலில் ஒழியாது திருவிளையாடல் புரியும் பச்சைமயில் வாகனக் கடவுள் என்றும், இரத்தின மணிகளையும் முத்து மணிகளையும் அலைகள் என்ற கரத்தால் கொழித்து பெருமான் திருவடியில் வீசியணிகின்ற, மாணிக்க நதி சூழ்ந்துள்ள கதிர்காமம் என்ற திவ்ய க்ஷேத்ரத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் என்றும், சிறந்த மலைகள் துகள்பட்டொழியவும் சூராதி யவுணர்கள் மாய்ந்தொழியவும் போர் புரிந்த வீரப்பெருமான் என்றும், பாம்பு பிறைமதி நதி ஆகியவற்றை முடியில் தரித்துள்ள, அமலராகிய, சிவபெருமானுக்குப் பிரணவோபதேசம் புரிந்த பரமகுருநாதர் என்றும், இருவினை யொப்பு கைவரப் பெற்று, கொடைத் தொழிலை விடாத தேவர்கள் குழுவுக்குத் தலைவர் என்றும் அறிந்து மனமே நீ உய்வாயாக. விரிவுரை திருமகளுலாவு................திருமருக:- இலக்குமியைத் திருப்புயத்தில் திருமால் தரித்தனர் என்பதன் கருத்து, காக்குங் கடவுளாதலின், காத்தற்றொழிலுக்கு இடையூறு செய்வோரை அழிப்ராதலால் திருமாலின் புயத்தில் வீரலட்சுமி உலவுகின்றனள். முராரி-முர அரி; முரன் என்ற அசுரனைக் |