கொன்றதனால் முராரி என்ப. திருமாலாதி தேவரும் மதிக்கும் “மானமூர்த்தி”யாக விளங்குகின்றார். ஜெகதலமும்..........................தெரிதருகுமார:- விண்ணுலகில் உள்ளவரும், மண்ணுலகில் உள்ளவரும் முருகவேளை உள்ளம் உருகிபாடி மகிழ்வர். அப்பாடல்களின் இனிமையையும் தாராதம்யங்களையும் ஆறுமுகக் டவுள் அறிகின்றனர். அவர் பெருந்தமிழ்ப் புலவர் அன்றோ? “கல்வி கரைகண்ட புலவோனே” - (அல்லசல) திருப்புகழ். “திரிபுரம் பொடியாக்கிய சங்கரர் குமர கந்த பராக்ரம செந்தமிழ் தெளிவுகொண் டடியார்க்கு விளம்பிய பெருமாளே” - (முனையழிந்தது) திருப்புகழ். எங்குந் தங்குக முருகன் புகழ். புகழ்ப்பாடல் பொலிக; அதுவே கலியின் மிகப்பெரிய பாவங்களைக் கெடுக்கவல்லது. அதனால் “கானமூர்த்தி”யாக விளங்குகின்றார். மருவ மடியார்கள் மனதில் விளையாடும்:- திருவருள் நெறியை மருவுபவர் என்று கூட்டுக. முருகன் சின்னஞ் சிறுபிள்ளை; பிள்ளைகட்கு விளையாடுவதில் அளவு கடந்த ஆர்வம் உண்டு. அங்ஙனம் ஆடுவதற்கு ஓர் அழகிய-குளிர்ந்த இடம் வேண்டும். குழந்தை குமரப்பனுக்கு விளையாடுகின்ற இடம் எது? அடியார் உள்ளமாகிய பூங்காவனமே. “மாசிலடியார்கள் வாழ்கின்ற ஊர்சென்று தேடிவிளையாடியே அங்ஙனே நின்று வாழு மயில்வீரனே செந்தில் வாழ்கின்ற பெருமாளே” - (மூளும்வினை) திருப்புகழ், அடியார்கள் உள்ளத்தில் “த்யானமூர்த்தி”யாக விளங்குகின்றார். மணிதரளம்................................கதிர்காம பெருமாள்:- கதிர்காம மிகச்சிறந்த திருத்தலம். முருகன் தலங்களுள் மகிமை நிரம்பியது. அது ஈழ நாட்டில் விளங்குவது. பிரமரந்திரஸ்தலம். இன்னும் பற்பல அற்புதங்கள் நிகழ இகபர சித்திதருவது. எம்பெருமான் சூராதி யவுணர்களைக் கொல்லும் பொருட்டுத் தங்கியிருந்த பாடி வீடு. யுத்தகோலமாக நின்ற நிலை. அதனால்தான் கதிர்காமத்தில் சுவாமி தரிசனம் கிடையாது. திரையை வணங்குகின்றனர். உருவ வழியாடு இல்லை. சிதம்பர |