பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 269

 

தருவினைவிடாத என்பதற்கு கற்பக விருட்சத்தை விட்டுநீங்காதவர்கள் எனினும் பொருந்தும். தேவர்கள் பயங்கெடுத்து அவர்கட்கு வாழ்க்கையைத் தந்தாராதலின் “தியாகமூர்த்தி”யாக விளங்குகின்றனர்.

இருதனவிநோத:-

பரஞானம், அபரஞானம், என்ற இரு ஞானங்களையும் வள்ளியம்மையாருக்கு விளஞ்குவதே பொழுது போக்காகக் கொண்டு உயிர்கள் இன்புறும் பொருட்டு இன்ப சக்தியுடன் மருவுகின்றனர். ஆதலின், “போகமூர்த்தி”யாக விளங்குகின்றனர்.

முருகப் பெருமானுடைய எட்டு பண்புகை இப்பாடல் விளக்குகின்றது. வெறுந் துதியாகவும் அமைந்துள்ளது. தொடக்கத்தில் இலக்குமியையும் இறுதியில் வள்ளிபிராட்டியாரையும் கூறுவதுடன் இடையில், பாடல், ஆடல், அருவி, வீரம், உபதேசம், கற்பம் ஆகிய பல மங்கல மொழிகள் வருவதால் இப்பாடல் மிகவும் மேன்மை தங்கியது. பாராயணத்திற்குரியது, மங்கல காலங்களில் பாடற் கேற்றது.

கருத்துரை

வள்ளியம்மையாருடைய கணவராகிய வடிவேற் பெருமாளை, திருமால் மருகராகவும், திருமால் மருகராகவும், உறிவினாலறியத் தக்கவராகவும், அடியார் உளத்தில் உறைபவராகவும் கதிர்காமக் கடவுளாகவும், அவுண குலகாலராகவும், சிவகுருநாதராகவும், தேவ தேவராகவும் அறிந்து உய்க.

185

அலகின் மழறு மாறாத கலதி புதவேதோளி
அடைவில் ஞாளி கோமாளி     அறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு வாழ்மாதர்
அருளி லாத தோடோய     மருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு     வெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
பரிசில் தேடி மாயாத     டிபாராய்
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி