ராவண புயாரிட:- அரிட்டம் -கேடு. இராவணன் சிவபெருமானை மதியாது வெள்ளிமலையைப் பேர்த்து எடுத்தான். சிவபெருமான் புன்னகை புரிந்து திருவடியின் விரலின் நகத்தினால் சிறிது ஊன்றினார். அவன் புயம் நெரிந்து ஓ என்று கதறி அழுதான். அழுததனால் “இராவணன்” என்று பேர் பெற்றான். விளக்கத்தைத் திருப்புகழ் விரிவுரை 5ஆம் தொகுதி 24ஆம் பக்கத்தி்ா பார்க்கவும். “அருவரை யெடுத்தவீர னெரிபடவீரற்களூனு மரன்” -திருப்புகழ் சரோருகரன்:- சரோருகம் - தாமரை; சிவபெருமான் தாமரையில் வீற்றிருக்கின்றார். “பதுமநன்மலரது மருவிய சிவன்” -திருஞானசம்பந்தர் விலாசுகம் வலார்:- வில் ஆசுகம்.ஆசுகம்-அம்பு. வில்லிலிருந்து அம்புவிடுவதில் வல்லவர்கள் வேடவர்கள். ஆகவ வியாதர்கள்:- ஆகவம் - போர். வியாதர் - வேடர். வேடர்கள் போர் புரிவதில் சமர்த்தர்கள். விராவு வயலார் புரி சிராமலை பிரான்மலை:- வயலூர், திருச்சிராப்பள்ளி, பிரான்மலை யென்ற கொடுங்குன்றம் இவை விராலிமலைக்கு அருகில் விளங்குகின்றன. கருத்துரை விராலிமலையுறை விமலா! சமாதி மநோலயம் அடியேனுக்குக் கிடைக்க அருள்புரிவீர். நிராமய புராதன பராபர வராம்ருத நராகுல சிராதிகப் ப்ரபையாகி நிராசசி வராஜத வராஜர்கள் பாவிய நிராயுத புராரியச் சுதன்வேதா சுராலய தராதல சராசர பிராணிகள் சொரூபமி வராதியைக் குறியாமே துரால்புகழ் பராதின கராவுள பராமுக துரோகரை தராசையற் றடைவேனா |