பக்கம் எண் :


270 திருப்புகழ் விரிவுரை

 

லெறியும் வேலை மாறாத    திறல்வீரா
இமய மாது பாகீர திநதி பால காசார
லிறைவி கான மால்வேடர்    சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
கதிர காம மூதூரி     லிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணைமேரு வேதேவர்     பெருமாளே.

பதவுரை

நீள் வாடை-எரிகொள் வேலை-நீண்ட வடவைத் தீயையுடைய கடல் மீதும், மாசூரில்-பெரிய சூரபன்மன் மீதும், இலகு வேலை எறியும் வேலை மாறாத- விளங்குகின்ற வேலாயுதத்தைச் செலுத்திய தொழிலை விடாத, திறல் வீரா-ஆற்றல் வாய்ந்த வீரரே! இமய மாது-இமயமலை யீன்ற பார்வதி தேவிக்கும், பாகீரதி நதி- கங்காநதிக்கும், பாலகா-திருக்குமாரரே! சாரல் இறைவி-மலைச்சாரலில் இருந்த தலைவியும், கான மால் வேட்ா சுதை பாகா-காட்டில் வாழும் பெருமை பொருந்திய வேடர்குலப்பாவையுமாகிய வள்ளியம்மையின் கணவரே! கலக வாரி போல மோதி- பேரொலி கொண்ட கடல் போல் அலைமோதிவரும், வடவை ஆறுசூழ்சீத-மாணிக்க கங்கை சூழ்ந்து குளிர்ச்சியுடைய, கதிர காம முது ஊரில்-கதிர்காமம் என்ற பழைய திருத்தலத்தில், இளையோனே-இளம்பூரணரே! கனக நாடு வீடு ஆய- பொன்னுலகத்தைத் தனக்கு வீடாகக் கொண்ட, கடவுள் யானை வாழ்வு ஆன- தேவயானைய்மமைக்கு வாழ்வாக விளங்கும், கருணை மேருவே-கருணையில் மேருபோன்றவரே! அலகின்மாறு-விளங்குமாறு, மாறாத கலதி-மாறுதல் இல்லாத மூதேவி, பூத-பூதம், வேதாளி-பேய், அடைவு இல் ஞானி-முறையில்லாத நாய், கோமாளி-கோணங்கி, அறம ஈயா அழிவு கோளி-தருமஞ் செய்யாமல் அழிவைக் கொள்ளுபவன், நாணாது-வெட்கம் இல்லாமல், புழுகு பூசி வாழ்-புனுகு வாசனையைப் பூசி வாழ்கின்ற, மாதர்-பொது மாதரின், அருள் இலாத தோள்தோய-அருள் இல்லாத தோள்களைச் சேரவேண்டி, மருள்ஆகி-காம மயக்கங்கொண்டு, பல கலா ஆகார- பலகலைகளுக்கும் உறைவிடமானவரே! மேருமலை-கருணையில் மேருமலை போன்றவரே! கரா அசரா-மலைபோன்ற புயத்தையுடையவரே! வீசு பருவ மேகமே- மழைவீசும் பருவ காலத்து - ஒரு சிறிதும் அன்புகொள்ளாத, மாபாதர்வரிசை பாடி- மகாபாதகர்களைப் புகழ்ந்து பாடி, ஓயாத பரிசில் ரேடி-ஓய்வில்லாமல் பரிசுப் பொருள்களைத் தேடி, மாயாதபடி பாராய்-அடியேன் இறந்து போகா வண்ணம் திருக்கண்ணோக்கி யருளுவீராக.