பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 273

 

வாடை ஏரி:-

கடல் நீரை மிகுதியாகாத வண்ணம் ஒழுங்குபடுத்துவது வடவைக்கனல்.

வேலைமாறாத திறல் வீரா:-

முருகவேள் அருகில் எப்போதும் வேல் விலகாமல் விளங்கும்.

“வேலை மறவாத கரதலா விசாகா”
                                    - (இரதமானவாயூறல்) திருப்புகழ்

கலகவாரி போல் மோதி வடவையாறு சூழ்சீத கதிர்காமம்:-

வடவையாறு-மாணிக்க கங்கை.

ஓர் அலை மற்றோர் அலையுடன் கலகம் புரிவது போல் மாறுவட்டு ஆரவாரத்துடன் மோதி வருகின்ற, நதி மாணிக்க கங்கை. இதன் கரையில் வானளாவிய குளிர்தருக்களுடன் கூடி விளங்குவது கதிர்காமம்.

கருத்துரை

கதிர்காமக் கடவுளே! மனிதரைப் பாடியலையாவண்ணம் கண்பார்த்தருள்வீர்.

186

உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய்   யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச்சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ்   வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி  ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ   தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சிலதூதர் நாடுக