குணக்குச் சிலதூதர் தேடுக வெனமேவிக் குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ அடிக்குத் திரகார ராகிய வரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென் றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர மளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே பதவுரை குடக்கு சில தூதர் தேடுக-மேற்கே சில தூதர்கள் தேட வேண்டும் என்றும், வடக்கு சிலதூதர் தேடுக-வடக்கே சில தூதர்கள் தேடவேண்டும் என்றும், குணக்கு சில தூதர்தேடுக என-கிழக்கே சில தூதர் தேட வேண்டும் என்றும், மேவி-அனுப்பி வைத்து, குறிப்பில் குறி காணு மாருதி இனி-குறிப்பினால் குறிப்பை யுணர்வல்ல அநுமன் இனி, தெற்கு ஒரு தூது போவது-தென் திசைக்கு ஒப்பற்ற தூதனாகப் போகவேண்டியது, குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ-சொல்லியனுப்பும், குறிப்பின் விவரப்படி குறித்த பொருள் காணமுடியாத போதிலும் வீணே திருப்பி வரலாமோ? வருதல் நன்றன்று என்று சொல்லியனுப்ப, அடிகுத்திரகாரர் ஆகிய- அடியுடன் வஞ்சகர்களாகிய, அரக்கர்க்கு இளையாத தீரனும் - அரக்கர்களிடம் இளைக்காத தீரனாய், அலைக்கு அப்புறம் மேவி-கடலைக் கடந்து அப்புறம் இலங்கைக்குச் சென்று, மாது உறு வனமே சென்று-சீதாதேவியிருந்த அசோக வனத்தை யடைந்து, அருள் பொன் திரு ஆழி மோதிரம்-ஸ்ரீராமபிரான் தந்தருளிய பொன்னாலாகிய அழகிய மோதிரத்தைச் சீதையிடம், அளித்து உற்றார் மேல்- கொடுத்துவிட்டுத் திரும்பிவந்த அந்த அநுமாருக்கு, மனோகரம் அளித்து-அன்புடன் அருள்புரிந்து, கதிர்காமம் மேவி-கதிர்காமத்தில் வீற்றிருக்கும்,. பெருமாளே- பெரமையிற் சிறந்தவரே! உடுக்க துகில் வேணும்-உடுப்பதற்கு உடைகள் வேண்டும்; நீள்பசி அவிக்க-பெரிய பசியைத் தணிக்க, கன பானம் வேணும்-உயர்ந்த சுவைநீர் வேண்டும்; நல் ஒளிக்கு-தேகம் நல்ல ஒளிதரும் பொருட்டு, புனல் - நீரும், ஆடை வேணும்-அடையும் வேண்டும்; மெய் உறுநோயை ஒழிக்க-உடம்பில் வந்த நோய்களை யகற்றும் பொருட்டு, பரிகாரம் வேண்டும்-மருந்துகள் வேண்டும், உள் இருக்க சிறு நாரிவேணும்-வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும்; படுக்க ஓர் வீடு வேணும்- |