படுப்பதற்கு ஒரு தனி வீடும் வேண்டும்! இவ்வகை யாவும் கிடைத்து-இந்த வகையான நலன்கள் யாவும் அடியேனுக்குக் கிடைக்கப் பெற்று, க்ருஹ வாசியாகி- குடும்பத்தனாகிய, மயக்க கடல் ஆடி-அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் முழுகி, நீடிய கிளைக்கு பரிபாலன் ஆய்-பெருத்த சுற்றத்தார்களைக் காப்பாற்றுவனாயிருந்து, உயிர் அவமே போம்-முடிவில் உயிர் வீணாகக் கழிந்து போகும்; ஆதலால் தேவரீர், க்ருபை சித்தமும்-உமது கருணை உள்ளத்தையும், ஞான போதமும், சிவஞான போதத்தையும், அழைத்து தரவணேும்-அடியேனை அழைத்துத் தந்தருளவேண்டும்;ஊழ்பவ கிரிக்கு உள்-ஊழ்வினையால் வரும் பிறப்பு என்ற மலைச் சூழலில், சுழல்வேனை ஆளுவது ஒருநாளே-சுழல்கின்ற அடியேனை ஆட்கொள்ளும் நாள் ஒன்று உளதாகுமோ? பொழிப்புரை மேற்கே சில தூதர்கள் தேட வேண்டும் என்றும், வடக்கே சில தூதர்கள் தேட வேண்டும் என்றும், கிழக்கே சிலதூதர்கள் தேட வேண்டும் என்றும் அனுப்பி வைத்து, குறிப்பில் குறிப்பறிக்னிற் ஆஞ்சனேயரை இனி தெற்கே ஒரு தூதனாகப் போக வேண்டியது; சொல்லியனுப்பும் குறிப்பு விவரத்தின்படி குறித்த பொருள் கிடைத்தல் தவறிப் போன போதிலும் திரும்பி வீணேவரலாமோ? வருதல் நன்றல்ல(என்று சுக்ரீவன் சொல்லியனுப்ப) அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாய்க் கடலைகடந்து அப்புறம் இலங்கைக்குப் போய், சீதையிருந்த அசோகவனம் புகுந்து, ஸ்ரீராமர் தந்த அழகிய பொன் மோதிரத்தைக் கொடுத்துத் திரும்பிய அநுமனுக்கு அன்புடன் அருள்புரிந்து கதிர்காமத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமிதமுடையவரே! உடுப்பதற்கு உடை வேண்டும்; பெரிய பசியைத்தணிப்பதற்குக் கெட்டியான பானகம் முதலிய சுனைநீர் வேண்டும்; உடலின் நல் ஒளிக்கும் நீரும், ஆடையும் வேண்டும்; உடலுக்கு உற்ற நோய்களை ஒழிப்பதற்கு மருந்துகள் வேண்டும்; வீட்டுக்குள் இருப்பதற்கு இளம்மனைவி வேண்டும்; படுப்பதற்கு ஒரு தனி வீடு வேண்டும்; இவ்வாறான நலன்கள் யாவும் கிடைத்துக் குடும்பத்தனாகி அந்த வாழ்வு என்ற மயக்கக்கடலில் முழுகி, பெரிய சுற்றத்தாரைக் காப்பவனாயிருந்து, முடிவில் உயிர் வீணே அழிந்து போம்; ஆதலால் உமது கருணை உள்ளத்தையும், சிவஞான போதத்தையும் அடியேனை அழைத்துத் தந்தருளவேண்டும்; ஊழ்வினையாகிய மலைச்சூழலில் சுழலுகின்ற என்னை ஆண்டு அருளும் நாள் ஒன்று கிடைக்குமோ? |