கருத்துரை கதிர்காமக்கடவுளே! உனது கருணையுள்ளத்தையும் சிவஞான போதத்தையும் எனக்குத் தந்தருள்வீர். எதிரி லாத பத்தி தனைமேவி இனிய தாணினைப்பை இருபோதும் இதய வாரிதிக்குள் உறவாகி எனதுளேசிறக்க அருள்வாயே கதிர காமவெற்பி லுரைவேனே கனக மேருவொத்த புயவீரா மதுரவாணியுற்ற கழலோனே வழுதி கூனிமிர்தத பெருமாளே. பதவுரை கதிர்காம வெற்பில் உறைவோனே-கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவரே! கனமேரு ஒத்த-பொன்மேருகிரியை ஒத்த, புயவீரா-தோள்களையுடைய வீரமூர்த்தியே! மதுரவாணி உற்ற-இனிய மொழியையுடைய கலைமகள் வந்து போற்றும், கழலோனே-திருவடியை யுடையவரே! வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே- பாண்டியனுடைய கூனை திருஞானசம்பந்தரை யதிஷ்டித்து நிமிர்த்தி யருளிய பெருமையின் மிக்கவரே! எதிர் இலாத பதிதிதனைமேவி சமான மில்லாத அன்பையுடையவனாகி, இனிய தாள் நினைப்பை-இனிமையைத் தரும், தேவரீருடைய திருடித் தியானத்தை, இருபோதும் -இரவும் பகலும், இதய வாரிதிக்குள் உறவு ஆகி- இருதயமாகி கடலின் கண்ணே பதிய வைத்து, எனது உளே சிறக்க-அடியேனுடைய உள்ளத்திலே சிறப்பு அடைய, அருள்வாயே-திருவருள்புரிவீர். பொழிப்புரை கதிர்காம மலையில் வாழ்பவரே! பொன் மேருகிரி போன்ற தோள்களையுடைய வீர மூர்த்தியே! இன் சொற்களையுடைய கலை மகள்-வணங்கும் திருவடியினரே! திருஞான சம்பந்தரை அதிஷ்டித்து பாண்டியனுடைய கூனை நிமிர்த்த பெருமிதமுடையவரே! சமானமில்லாத அன்பை அடியேன் உடையவனாகி, தேவரீருடைய திருவடித்தியானத்தை இரவும் பகலும் ஒழியாது |