பக்கம் எண் :


28 திருப்புகழ் விரிவுரை

 

இராகவ இராமன்முன்இராவண இராவண
             இராவணஇராஜனுட்                    குடன்மாய்வென்
       றிராகன்ம லராணிஜ புராணர்கு மராகலை
              யிராஜசொலவாரணர்க்                    கிளையோனே
விராகவ சுராதிப பொராதுத விராதடு
             விராயண பராயணச்                         செருவூரா
       விராவிய குராவகில்பராரைமு திராவளர்
                   விராலிம லைராஜதப்                    பெருமாளே

பதவுரை

இராகவ இராமன்முன் - இரகுவின் மரபில் வந்த இராமபிரான் முன்னாளில், இராவண - அழுகுரலுற்றவனும், இராவண இராஜன்-இராவணன் என்ற அரசன், உட்குடன் மாய் வென்ற-அச்சப்பட்டு மாயும்படி வென்ற, இராகன்-அன்பு உடையவரான திருமாலின், மலர் ஆள் நிஜபுராணர்-கண்ணையே மலராகக் கொண்டருளிய பழைய வரலாற்றையுடைய சிவபெருமானுடைய, குமரா- புதல்வரே! கலை இராஜ-கலைகளுக்குத் தலைவரே! சொல் அ வாரணர்க்கு இளையோனே-புகழ்ப்படும் அந்த யானை முகவர்க்கு இளையவரே! விராகவ- ஆசையில்லாதவரே! சுரஅதிப-தேவர்கட்கு தலைவரே! பொராது- போர்புரியாமலே, தவிராது-தவறுதல் இல்லாமலே, அடு-வெல்லவல்ல, விர அயண பராயண-வீர வழியில் விருப்பம் உடையவரே! செரு ஊரர்- திருப்போரூரில் உறைபவரே! விராவிய குரா-கலந்து விளங்கும் குராமரமும், அகில்-அகில் மரமும், பராரை முதிராவளர்-பருத்த அடிமரத்துடன் முதிர்ந்து வளருகின்ற, விராலிமலை-விராலிமலையில் வாழ்கின்ற, ராஜத-அரசகுணமுடைய, பெருமாயே-பெருமையிற் சிறந்தவரே! நிர் ஆமய-நோயில்லாததும், புராதன பழமையானதும், பராபர-எல்லாவற்றுக்கும், மேலானதும், வர அம்ருத- வரத்தைத்தரும் அழிவில்லாததும், நிர் ஆகுல - கவலையில்லாததும், சிர அதிக-முதன்மையாகிச் சிறந்ததும், ப்ரபை ஆகி-ஒளிமயமாய் விளங்கி, நிர் ஆச-ஆசையற்றதும், சிவராஜ-சிவத்துடன் மகிழும், தவ ராஜர்கள், தவ வேந்தர்கள், பராவிய-புகழுகின்றதும், நிர் ஆயுத புர அரி-ஆயுதத்தை விடாமலேயே புரங்களை எரித்த சிவன், அச்சுதன்-திருமால், வேதா-பிரமன், சுர ஆலய-தேவலோகம், தராதல-மண்ணுலகம், சர அசர பிராணிகள்- இயங்குவன, நிலைத்திருப்பன ஆகிய, உயிர்கள், சொரூபம் இவர்-இந்த உருவங்களில் கலந்துள்ளதும் ஆகிய, ஆதியை குறியாமே-ஆதிப்பொருளை அடியேன் குறித்துத்தியானிக்காமல், துரால் புகழ்-பயனற்ற புகழைக் கொண்டு, பர ஆதீன-பிறருக்கு அடிமைப்பட்டு, கராஉள-முதலைபோன்ற உள்ளத்தை