பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 281

 

அந்நதியில் இனிய தண்ணீர் வெள்ளம் தூயமையாக எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கும்.

முருகவேள் சூரசங்காரத்தின் பொருட்டு போர்க் கோலத்துடன் ஏமகூடம் என்ற மலையில் படைகளுடன் தங்கினார். அந்ததலமே கதிர்காமம் என்க. பாசறை; போர்க்லோமூர்த்தி; என்று இங்கு திரைக்கே வணக்கம் செலுத்துவது வழக்கம். இத்தலத்தில் பக்த கோடிகள் கற்பூர தீவட்டியுடன் அன்பு வெள்ளம் பொங்கிக் கரைபுரண்டு ஓட வழிபடுவார்கள்.

கனகமேரு ஒத்த புயவீரா:-

முருகவேளுடைய புயங்கள் பொன்மேருகிரி போன்ற திட்பமுடையது. உலகங்களைக் காக்கின்ற கடவுளுக்குத் தோள்வலி சிறப்புடையது. அதனாலேதான் “ஆறிருடந்தோள் வாழ்க” என்று முதலில் தோள்களை வாழ்த்துகின்றனர் கச்சியப்பர்.

இராமர் மிதிலை சென்றபோது அங்குள்ள அறிவுள்ள பெண்கள் அவருடைய தோளை முதலில் நோக்கினார்களாம்.

“தோள்கண்டார் தோளே கண்டார்”                   - கம்பர்.

“அலகிலவுணரைக் கொன்ற தோளன்”             - திருப்புகழ்

மதுரவாணியுற்ற கழலோனே:-

இனிய மொழியை யுடையவள் கலைகமள், “மதுரவாணி தானாட” என்று பிறிதொரு திருப்புகழிலும் கூறினார்.

இனிய மொழியே உலகத்தைக் கவர்ந்து உய்விக்கும். எத்துணைப் பெரிய முரடர்கட்கும் இனிமையாகக் கூறினால் எடுபடும்.

கலைமகள் மதுர மொழியால் உலகிற்கு கலை நலத்தை உணர்த்துகின்றனள். முருகக் கடவுள் மதுர மொழியால் அகில உலகங்கட்கும் அருட்கலை நலத்தை உணர்த்துகின்றனர். அதனால் வாணி வந்து பணிகின்றாள்.

“மதுர மொழியாலுல கனைத்தையு முணர்த்துமவன்
   வடவனல நேர்கொடிய குக்குட முயர்த்த குகன்” - திருவகுப்பு (6)

வழுதி கூனிமிர்த்த பெருமாளே:-

முருகவேள் சிவமூர்த்தமே யாகும்

“ஈசனே யவன்ஆடலால் மதலையாயினன் காண்”
“..........................அநாதியாய் நங்கட்கெல்லாம்
மூலகாரணமாம் வள்ளல் மூவிருமுகங் கொண்டுற்றான்”
“மாலயன் றனக்கும் ஏனைவானவர் தமக்கும் எட்டா
மூகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தியன்றோ”  - கந்தபுராணம்