பக்கம் எண் :


282 திருப்புகழ் விரிவுரை

 

ஆகவே சிவமூர்த்தியோ பிறப் பிறப்பில்லாதவர். சிவமே முருகவேள் என்றமையால் முருகனுக்கும் பிற பிறப்பில்லை என்பது பெறப்பட்டது.

“பெம்மான முருகன் பிறவான் இறவான்”              - அநுபூதி (12)

ஆதலினால் முருகன் திருஞான சம்பந்தராக அவதரித்தார் என்பது பதியிலக்கணத்துக்கு முரணாகும். அங்ஙனம் தெய்வச் சேக்கிழாரும் செப்பினாரில்லை.

எனவே முருகவேள் திருவருள் திருஞான சம்பந்தரை அதிஷ்டித்து மதுரையில் சைவ சமயத் தாபனம் நிகழ்ந்தது. அதனால் முருகவேள் மீது அதனை வைத்து அருணகிரிநாதர் பல இடங்களில் இங்ஙனம் கூறுகின்றார் என உணர்க.

கருத்துரை

கதிர் காமவேலவரே! வீரப்புயாசலரே! வாணிதொழும் வள்ளலே! சைவசமயத்தாபகரே! ஒப்பற்ற அன்புடன் இடையறாது உமது திருவடியை நினைக்க அருள்புரிவீர்.

188

கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
காமத் தரங்கம்   மலைவீரா
கனகத நககுலி புணரித குணகுக
காமத் தனஞ்சம்   புயனோட
வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் தவழாது
வழிவழி தளதமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன்   றிடுமோதான்
அடவியி ருடியபி நவகும ரியடிமை
யாயப் புனஞ்சென்    றயர்வோனே
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
யாளப் புயங்கொண்  டருள்வேனோ
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
ஏழைக் கிடங்கண்   டவர்வாழ்வே
இதமொழி பகிரினு மதமொழி பகரினும்
ஏழைக் கிரங்கும்  பெருமாளே.