பதவுரை கட கட கருவிகள் தப-கட கட என்று ஒலிக்கும் பறை முதலிய கருவிகளின் ஒலியும் அடங்குமாறு, வகிர் அதிர்-கோடுகளையுடைய புலிகள் ஒலிசெய்கின்ற, கதிர்காம-கதிர் காமத்து ஈசனே! தரங்கம் அலை வீரா-அலைகளுடன் கூடிய கடலை அலைத்து வருந்திய வீரமூர்த்தியே! கன கத-பெருமையும் கோபமும் பொருந்திய, நககுலி-மலையையொத்த யானை வளர்த்த தேவயானையை, புணர் இதகுண-மருவிய இனிய குணங்களையுடையவரே! குக-இதயகுகையில் வாழ்பவரே! காம அத்தன்- மன்மதனுடைய பிதாவாகிய திருமால், அஞ்ச-பயப்படவும், அம்புயன் ஓட-தாமரை மலரில் வாழும் பிரமன் ஓடவும், வடசிகரகிரி தவிடுபட-வடக்கேயுள்ள மேருமலை தவிடுபொடி படவும், நடம் இடு-நடனஞ் செய்கின்ற, மாவில்-மயிலாகிய குதிரை மீது, புகும் கந்த-ஆரோகணித்து வருகின்ற கந்தக் கடவுளே! அடவி இருடி-கானத்தில் தவஞ்செய்திருந்த சிவமுனிவரின், அபிநவகுமரி-புதுமையான புதல்வியாகிய வள்ளி நாயகிக்கு அடிமையாய்-அடிமைய ஆகி அ புனம்! சென்று அயர்வோனே-அந்தத் தினைபுனத்திற்குச் சென்று தளர்ந்தவரே! அவசமுடன்-வெயிலால் மயக்கமுடன், அததி திரிதரு-அந்தச்சமயத்தில் போய்க் கொண்டிருந்த, கவி ஆள-கவியாகிய பொய்யா மொழிப் புலவரை ஆட்கொண்டருளும் பொருட்டு, அயில் புயம் புரிந்தவரே! இடம் ஒரு மரகத மயில் மிசை வடியு உள-தமது இடப்பாகத்தில் மரகத மயிலுக்கு மேலான அழகுள்ள, ஏழைக்கு இடம் கண்டவர் வாழ்வே-பார்வதி தேவிக்கு இடந்தந்த சிவபெருமானுக்குச் செல்வக் குமாரரே! இத மொழி பகரினும்-சிறிது செருக்குடன் பேசினாலும், ஏழைக்கு இரங்கும்-இந்த ஏழையினிடத்தில் இரக்கங் காட்டும், பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! வாழாது-தவறுதல் இல்லாமல், வழிவழி தமர் என-வழிவழியாக உறவினன் என்னும்படி, வழிபடுகிலன்-அடியேன் தேவரீரை வழிபடுகின்றிலேன்; என் அவா-எனது மூவாசைகளும், விக்கினம்-மற்றுள்ள தடைகளும், பொன்றிடுமோதான்-அழிந்து ஒழியுமோ? பொழிப்புரை கட கட என்று ஒலிக்கும் பறை முதலிய கருவிகளின் ஒலி அடங்குமாறு ஒலிக்கின்ற புலிகள் வாழ்கின்ற கதிர்காமத்து ஆண்டவரே! கடலை வருத்திய வீர மூர்த்தியே! பெருமையும் கோபமும் உடைய மலைபோன்ற ஐராவத யானை வளர்த்த தெய்வயானையைத் தழுவுகின்ற இனிய குணத்தையுடைய |