பக்கம் எண் :


284 திருப்புகழ் விரிவுரை

 

குகமூர்த்தியே! மன்மதனுடைய பிதாவாகிய திருமால் அஞ்சவும், தாமரையில் வாழும் பிரமன் ஓடவும், வடமேருகிரி தவிடு பொடியாகவும் நடிக்கின்ற மயிலின் மீது ஏறும் கந்தக் கடவுளே! கானகத்தில் தவஞ்செய்த சிவமுனிவரின் புதுமையான புதல்வியாகிய வள்ளி நாயகிக்கு அடிமையாகி அத்தினைப்புனம் போய் தளர்ச்சியுற்றவரே! வெயிலின் கொடுமையால் மயக்கமுற்று அத்தருணத்தில் சென்று கொண்டிருந்த பொய்யா மொழி புலவரை ஆட்கொண்டருளும் பொருட்டு வேலைத் தோளில் ஏந்திச் சென்று அருள்புரிந்தவேர! தமது இடப்பக்கத்தில் மரகத மயிலுக்கு மேலான அழகுள்ள பார்வதிதேவிக்கு இடந்தந்த சிவபெருமானுடைய செல்வக்குமாரரே! அடியேன் இனிய மொழி பகர்ந்தாலும், தருக்குற்று கடுஞ் சொற்கள் பகர்ந்தாலும், ஏழையேனுக்கு கருணை புரியும் பெருமிதம் உடையவரே! தவறுதல் இல்லாமல் வழி வழியாக உறவினன் என்னும் படி அடியேன் உம்மை வழிபடும் ஆற்றல் இல்லாதவனாக இருக்கின்றேன். எனக்குள்ள மூவாசைகளும் ஏனைய தடைகளும் அழிந்து ஒழியுமோ?

விரிவுரை

கட கட கருவிகள் தப வகிரதிர்:-

வகிர்-கீற்று. கீற்றுக்களையுடைய புலிையைக் குறிக்கின்றது. கட கட என்று முழங்குகின்ற பறை முதலிய வாத்தியங்களின் ஒலியை அடக்கி புலிகள் முழங்குகின்றன.

கதிர்காமத்தலம் பெருங்காட்டில் திகழ்கின்றது. புலிகளும் யானைகளும் பிற விலங்குகளும் இரவு பகல் இரை தேடியுலாவுகின்றன.

தரங்கமலை வீரா:-

தரங்கம் அலை வீரா. தரங்கம்-அலை,. தானியாகு பெயராகக் கடலைக் குறிக்கின்றது. சமுத்திரத்தை அலை-அலைத்த வீரா. தரங்கம்-அருவிகளின் அலைகளுடன் கூடிய மலையில் வாழும் வீரரே! என்றும் பொருள் கொள்ளலாம்.

கனகத நககுலி:-

கனம்-பெரும். கதம்-கோபம். நகம்-மலை.

இது உவம ஆகு பெயராக யானையைக் குறிக்கின்றது. பெருமையும் கோபமும் உடையமலைபோன்ற யானையாகிய ஐராவதத்தின் மகள் தெய்வயானை.