பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 285

 

காமத்தனஞ் சம்புயனோட:-

காம அத்தன் அஞ்ச அம்புயன் ஓட என்று பதபிரிவு செய்; காம அத்தம்- மன்மதனுக்குத் தந்தை; திருமால். மயிலின் நடனத்தைக் கண்டு திருமால் அஞ்சினார்; பிரமன் அஞ்சி ஓடினார்.

வடசிகர கிரி தவிடுபட நடமிடு மா:-

மா-குதிரை. இது மயிலைக் குறிக்கின்றது.

மாயில் நடனம் செய்யும் போது பொன்மேருகிரி இடிந்து தவிடு பொடிபட்டது.

“வாசி விலைகொண்ட வாகனப் பீலியின்கொத்
   தசைடு கால்பட்ட சந்ததுமேரு; அடியிட எண்
   திசைவரை தூள்பட்ட; அத்தூளின் வாரி திடர்பட்டதே”
                                                        -கந்தரலங்காரம் (11)

அடவி இருடியபிநவ குமரி:-

திருமால் சிவமுனிவராய்ப் பிறந்தார். அவர் வள்ளிமலைக் காட்டில் தவஞ் செய்து கொண்டிருந்தார்.

மகாலட்சுமியே மானாக வந்து அஞ்கு உலாவினாள். அம் மானை அவர் நயனத்தால் புணர்ந்தார். மான் கருவுற்று வள்ளியைப் பெற்றது.

“தத்து கவனவரி ணத்து உபநிடவி
   த்து முனியுதவு மொழியாறுத்
   தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர்
   தத்தை தழுவியப னிருதோளா”  - (அத்துகிரி) திருப்புகழ்.

அயிலவசமுடன ததிதிரி தருகவி யாளப்புளங்கொண்டருள்வாயே:-

அயில் புயங்கொண்டருள்வோனே என்று கூட்டுக. அவசமுடன் அ ததி திரிதரு கவி கவி-பொய்யாமொழிப் புலவன். “வெயிலின் கொடுமையால் மயங்கி அந்த நேரத்தில் காட்டில் திரிந்த புலவன். அ-அந்த. ததி-தருணம்.

பொய்யாமொழிப் புலவர் வரலாறு

சோழ நாட்டில் பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்தார். இவர் சிவபெருமான் ஒருவரையே பாடும் நியமம் உடையவர். ஒரு முருகனடியார் முரகனைப் பாடுமாறு வேண்டினார். “கோழியைப் பாடிய நாவால் குஞ்சைப் பாடமாட்டேன்” என்று கூறி மறுத்தார்.

முருகனைப் பாட மறுத்த வினையால் வறுமையாம் சிறுமை வந்துற்றது. வாடினார், வருந்தினார், பாண்டிய நாடு சென்று, பாண்டியனையும், பாண்டிமா தேவியையும், மந்திரியையும்