கானப் பேர் கணிகையரையும் பாடிப் பொன்னும் பொருளும் நிரம்பப் பெற்றுத் திரும்பினார். ஒரு பாலைவனத்தின் வழியே வரும்போது, முருகர் வேடனாக வில்லும் அம்புந் தாங்கி வந்து அவரை வழிமறித்தார். புலவர் நடுங்கினார். “இந்தப் பாலையைப் சிறப்பித்து “நாற்றாயிரங்கல்” என்ற துறையாக, என் பேர் முட்டை, என் பேரையும் அமைத்துப் பாடுக” என்றார் வேடனாக வந்த வேலவர். பொய்யாமொழிப் புலவர். “பொன்போலுங் கள்ளிப் பொறி பறக்குங் கனலிலே என்பேதை செல்லற் கியைந்தனனே-மின்போலு மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங் கானவேல் முட்டைக்குங் காடு.” என்று பாடினார். முருகர், “புலவரே! நின்பாடலில் பொருட் குற்றம் உள்ளது. பால் நிறைந்த கள்ளிச்செடி எரிந்து கரிந்துபோம் காட்டில் ஈரமில்லாத வேலமுள் சாம்பலாகப் போயிருக்குமே? அது எப்படித் தைக்கும்? ஆதலால் இது பிழை” எனக் கூறி நனைத்து, “நானும் பாடுவேன், உன் பேரைக் கூறு; உன் பேரை அமைத்து இதே துறையில் நான் பாடுகின்றேன், பார். “ என்றார். ‘என் பேர் பொய்யாமொழி‘ என்றார் புலவர். ‘விழுந்ததுளி அந்தரத்தே வேம் என்றும் வீழின் எழுந்து சுடர்சுடும் என்றும்-செழுங்கொண்டல் பெய்யாத கானகத்துப் பெய்வளையம் போயினளே பொய்யா மொழிப்பகைஞர் போல். என்று முருகவேள் பாடியருளினார். பின்னர் “புலவரே! நீ குஞ்சைப் பாடமாட்டேன் என்றாயே; இப்பொழுது முட்டையைப் பாடினாயே; எனக் கூறி, அவர் உள்ளத்தைத் திருத்தி தமது காட்சியைத் தந்தனர். சிவனே முருகன், இருவருக்கும் பேதம் இல்லை என்று உணர்த்தி அருள் புரிந்து மறைந்தருளினார். “முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக்கவிபெறு பெருமாளே” - (பத்தித்தர) திருப்புகழ். “நாற்றாயிரங்கல்” என்ற துறையில் பாடினார் என்றும் அருணகிரிநாதர் கூறுகின்றார். |