“கற்றாவிற் காட்டிக் கரைதுறை நற்றாயிற் காட்டிப் புகழ்கமலை கற்றார்சொற் கேட்கத் தனிவழ் வருவோனே” - (சிற்றாய) திருப்புகழ். “பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம் புரக்கா எழுநாள் மறவனாய்ப் புறவுற வணைத்தெனது பெயர் முட்டை பாடெனப் பொன்போலும் என்றுபாட வெய்யான பாலைக்கி தேலாது நம்பெயர் விளம்பென விளம்ப அவர்மேல் விழுந்ததுளி என்றெடுத்துப்பாடியவர் நாவில் வேல்கொடுத்து பொறித்த சதுரா” - திருவிரிஞ்சை முருகன்பிள்ளைத்தமிழ். ஏழைக்கிடங் கண்டவர்:- ஏழை-பெண். “எருதேறி யேழையுடனே” -சம்பந்தர் “ஏழைபங்காளனையே பாடேலோ ரெம்பாவாய்” -திருவாசகம் இதமொழி பகரினும் மதமொழி பகரினும் ஏழைக்கிரங்கும் பெருமாளே:- முருகப் பெருமான் கருணாமூாத்தி. அப்பெருமான், தன்னை இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும், கருணைபுரிவான். கல்லாலும் வில்லாலும் அடித்தவாக்கு அருளிய கண்ணுதற் கடவுளின் புதல்வர் அல்லவா? கருத்துரை கதிர்காமக் குமரேசா! என் ஆசைகளும் தடைகளும் தொலைய அருள் செய்வீர். சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட தனமசைய வீதிக்குள் மயில்போலு லாவியே சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர் தமையுணர ராகத்தின் வசமாக மேவியே உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு முரியர் மகாதத்தை யெனுமாய மாதரார் ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு |