முனதருள்க்ரு பாசித்த மருள்கூர வேணுமே இமகிரிகு மாரத்தி யனுபவைப ராசத்தி யெழுதரிய காயத்ரி யுமையாள்கு மாரனே எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து இதணருகு சேவிக்கு முருகாவி சாகனே அமரசிறை மீளவிக்க அமர்செய்துப்ர தாபிக்கு மதிகவித சாமர்த்ய கவிராஜ ராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த அரியகதிர் காமத்தி லுரியாபி ராமனே. பதவுரை இமகிரி குமாரத்தி-இமயமலையின் புதல்வியும், அநுபவை-இன்ப நுகர்ச்சிகளை உயிர்கட்கு ஊட்டுபவளும், பராசக்தி-பேராற்றலுடையவளும், எழுத அரிய காயத்ரி- எழுதுதற்கு அரிய காயத்ரி மந்திர சொரூபியும், உமையாள்-உமாதேவியுமாகிய பார்வதியம்மையின், குமாரனே-புதல்வரே! எயினர் மட மானுக்கு-வேடர் குலப் பாவையாகிய வள்ளியின் பொருட்டு, மடல் எழுதி மோகித்து-மடற்பனையில் அவள் உருவை எழுதி விரும்பி, இதண் அருகு சேவிக்கு-பரண் அருகில் சேவித்து நின்ற, முருகா-முருகக் கடவுளே! விசாகனே-விசாக மூர்த்தியே! அமரர் சிறை மீள்விக்க- தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, அமர் செய்து-போர் புரிந்து, ப்ரதாபிக்கும்-கீர்த்தியடைந்த, அதிகவித சாமர்த்ய-மிகுந்த மேலான திறமை வாய்ந்த, கவிராஜராஜனே, கவிச்சக்கரவர்த்தியே! அழுது உலகை வாழ்வித்த-அழுது உலகங்களை யெல்லாம் வாழ வைத்த, கவுணிய குல ஆதித்த-கவுணிய குலத்தில் உதித்த சூரியனே! அரிய கதிர்காமத்தில் உரிய-அருமையான கதிர்காமத்திற்கு உரிய, அபிராமனே-அழகரே! சமரமுக-போர் முகத்துக் உரிய, வேல் ஒத்த-வேலாயுதம் போன்ற, விழி புரள-கண்கள் புரளவும்-வார் இட்டதனம் அசைய-இரவிக்கை யணிந்த தனங்கள் அசையவும், வீதிக்குள் மயில் போல் உலாவியே-தெருவில் மயில் போல் நடமாடி, சரியை க்ரியை யோகத்தின் வழிவரும்-சரியை கிரியை யோகம் என்ற வழிகளில் நிற்கும், க்ருபா சுத்தர் தமை-அருளும் தூய்மையும் உடைய பெரியோர்களும், தமை உணர்-தம்மைக் கண்டு மோகிக்கும் படியாக, அராகத்தின் வசம் ஆக மேவியே-ஆசைக்காட்டும் வழிகளில் பொருந்தி, உமது அடி உனாருக்கும்-உமது திருவடியை-நினையாதவருக்கும், அனுமரண மாயைக்கும்- மரணத்துடன் கூடிய மாயையிற்பட்டவர்க்கும், உரியவர் மகாதத்தை எனும்- உரியவராய் சிறந்த கிளிகள் எனப்படும், மாய மாதரார்-மாயத்தில் வல்ல பொது |