மடலெழுதி:- தான் விரும்பிய தலைவியை யடையும் பொருட்டு, பனைமடல்களால் குதிரையாகச் செய்து, அதன் மீது தலைவன் ஏறி, தலைவியின் உருவத்தை எழுதிய கொடியைப் பிடித்து ஊரவர் அறிய உலாவி வருவன். அழுதுலகை வாழ்வித்த கவுணிய குலாதித்த:- முருக சொரூபம் பெற்ற ஒருவர் சீகாழியில் கவுணியர் குலத்தில் திருஞான சம்பந்தராகத் திருவவதாரம் புரிந்தார். அவர் உலகந் தழைக்க அழுது, சிவஞானப்பாலையுண்டு, பதினாறாயிரந் திருப்பதிகங்களைப் பாடியருளினார். வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். - பெரியபுராணம் கருத்துரை கதிர்காமக்கடவுளே! உனது அருட்டிருவுள்ளத்தை யளித்தருள்வீர். சரத்தே யுதித்தர யுரத்தே குதித்தே சமர்த்தா யெதிர்த்தே வருசூரைச் சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய் தகர்த்தா யுடற்றா னிருகூறாச் சிரத்தொடு டுரத்தோ டறுத்தே குவித்தாய் செகுத்தாய் பலத்தார் விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய் திருத்தா மரைத்தா ளருள்வாயே புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார் பொரத்தார் னெதிர்த்தே வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தார் ரெரித்தார் பொரித்தார் நுதற்பார் வையிலேபின் கரித்தோலுரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்தூர் மதனாரைக் |