பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 291

 

கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
கதிர்காம முற்றார்   முருகோனே

பதவுரை

புரத்து ஆர் வரத்தார்-திரிபுரத்தில் வாழ்ந்த வரம் பெற்றவர்கள், சரசேகரத்தார்- அம்புகளின் கூட்டத்தைக் கொண்டவர்கள், பொரத்தான் எதிர்த்தே வருபோது-போர் செய்வதற்கு எதிர்த்து வந்தபோது, பொறுத்தார்-பொறுமையுடன் இருந்தார்; பரித்தார்- போர்க் கோலத்தைக் தாங்கினார்; சிரித்தார்-சிரித்தார்; எரித்தார்-திரிபுரத்தை எரித்தார்; நுதல்பார்வையிலே பொரித்தார்-நெற்றிக் கண்ணால் பொரிபடச் செய்தார்; பின்கரி தோல் உரித்தார்-பின்பு யானையின் தோலை உரித்தார்; விரித்தார்-அதை விரித்தார்; தரித்தார்-தரித்துக் கொண்டார்; கரத்து ஆர் முருத்து ஊர் மதனாரை-தமது திருவடியிலே கருத்துடையராய் தென்றல் தேரில் ஊர்ந்து வந்த மன்மதனாரை, கரிகோலம் இட்டார்-கரி அலங்காரமாக்கினார்; ஆகிய சிவபெருமானுடைய கணுக்கே ஆன முத்தே-குண்ககாரமாக்கினார்; ஆகிய சிவபெருமானுடைய, கஷக்கு ஆன முத்தே-கண்களுக்கு பிரியமான முத்தே; கதிர்காமம் உற்று ஆர்-கதிர் காமத்தில் எழுந்தருளியிருக்கும், முருகோனே-முருகக் கடவுளே! சரத்தே வலிமையுடன், குதித்தே-குதித்துக் கொண்டு, சமர்த்தாய் எதிர்த்தே வருசூரை-சாமர்த்தியமாய் எதிர்த்து வந்த சூரபன்மனை, சரிப்போன மட்டே விடுத்தாய்-சரியாக நடந்த வரையில் சும்மா விட்டிருந்தீர்; அடுத்தாய்-நெருங்கினீர்; உடல் தான் இருகூறா தகர்த்தாய்-உடல் இருபாதியாகும்படி பிளந்தீர்; சிரத்தோடு உரத்தோடு அறுத்தே குவித்தாய்-தலையுடன் மார்பையும் அறுத்துக்குவித்தீர்; செருத்தாய்-கொன்றீர்; விருது ஆக-வெற்றிக்கு அடையாளமாக, பல தார்-பலவகை மாலைகளையும், சிறை சேவல் பெற்றாய்- சிறகையுடைய சேவலையும் பெற்றீர்; வலக்கரம் உற்றாய்-வெற்றியை யடைந்தீர். (அத்தன்மையைராகிய நீர்,) திருதாமரை தாள் அருள்வாயே-அழகிய தாமரையன்ன திருவடிகளைத் தந்தருளுவீராக.

பொழிப்புரை

திரிபுரத்திலிருந்த வரம் பெற்றவர்கள், அம்புகளின் கூட்டத்துடன் எதிர்த்துப் போருக்கு வந்தபோது, பொறுமையுடன் இருந்தார்; போர்க்கோலத்தைத் தாங்கினார்; சிரித்தார்; எரித்தார்; நெற்றிக்கண் பார்வையால் பொரிபடச் செய்தார். பின்பு யானையை உரித்து அதன் தோலை விரித்துத் தரித்துக் கொண்டார்; தமது திருவடியில் கருத்துடையவனாய் தென்றல் தேரில் ஏறி வந்த