மன்மதனை கரியலங்கார மாக்கினார் ஆகிய சிவபெருமானுடைய கண்களுக்குப் பிரியமான முத்தே! கதிர் காமத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகக் கடவுளே! நாணல் காட்டில் இடைய உதித்தீர்! வலிமையுடன் குதித்துக் கொண்டு ஆற்றலோடு எதிர்த்து வந்த சூரபன்மனை, சரியாக நடந்த வரை விட்டுவைத்தீர்; சரிதப்பியபின் அடுத்து நெருங்கி வந்தீர்; உடல் இரு கூறாமாறு பிளந்தீர்; சிரத்தையும் மார்பையும் அறுத்துக் குவித்தீர்; அவனைக் கொன்றீர்; வெற்றிக் அடையாளமாகப் பல மாலைகளையும் சிறகையுடைய சேவலையும் பெற்றீர்; வெற்றி பெற்றீர்; இத்தகைய தேவரீர் அடியேனுக்கு உமது தாமரையன்ன அழகிய பாதமலரைத் தந்தருளுவீர். விரிவுரை சரத்தேயுதித்தாய்:- சரம்-தர்ப்பை. கங்கையின் அருகில் இருந்த தருப்பை வனஞ்சூழ்ந்த பொய்கையில் முருகவேள் தோன்றியருளினார். அதனால் சரவணபவன் என்ற திருநாமம் ஏற்பட்டது. சரிப்போன மட்டேவிடுத்தாய் அடுத்தாய்:- சூரபன்மன் அடக்கமாக வாழ்கின்ற வரை அவனை விட்டு வைத்தார். இறைவர்; தவறுகள் மிகுதியாகச் செய்யத் தொடங்கியப்பின் அவனை நெருங்கிப் போர் புரிந்தார். உடற்றான் இருகூறாய்:- அவனிடம் இருந் அகங்காரம் மமகாரம் என்ற இரண்டையும் வேறு வேறாக்கி யழியுமாறு செய்தார். புரத்தார் வரத்தார் சரச்சேகரத்தார்:- பொன், வெள்ளி, இரும்பு என்ற மூன்று லோகத்தால் ஆகிய கோட்டைகளையுடையவர்கள், திரிபுராதிகள். கமலாட்சன், தாரகட்சன், வித்யுன்மாலி என்போர். அவர்கள் வரப்பிரசாதம் பெற்றவர்கள்; பல சிறந்த பாணங்களைச் சேகரித்திருந்தார்கள். பொறுத்தார்:- சிவபெருமான் திரிபுராதிகளைக் கண்டு பொறுமையுடன் இருந்தார். பரித்தார்:- தேரும் வில்லும் அம்பும் கொண்டு போர்க்கோலந் தாங்கினார். சிரித்தார் எரித்தார்:- ஒவ்வொரு தேவனும் தான் துணை செய்வதனால் தான் |