திரிபுரவதம் நிகழ்கின்றது என்று எண்ணித் தருக்குற்றார்கள். நமக்குத் தேரும் வில்லும் வேண்டுமோ” என்று திருவுளம் பற்றிச் சிவபிரான் சிறுநகை செய்தார். அந்நகையில் இருந்து தோன்றிய அனற் பொறியால் அப்புரங்கள் எரிந்து சாம்பலாயின. கரித்தோலுரித்தார் விரித்தார் தரித்தார்:- கஜமுகன் என்ற அவுணன் சிவபெருமான் மீது போருக்கு வந்தான். அந்த யானையை உரித்துத் தோலைச் சிவபெருமான் போர்த்துக் கொண்டார். கருத்தார் மருத்தார் மதனார்:- பிரமாதி தேவர்கள், சிவபெருமான் சனகாதியருக்கு மௌன நிலையையுணர்த்தி யோகியாயிருந்த தவநிலையை பழிக்குமாறு மன்மதனுக்குக் கட்டளையிட்டார்கள். மன்மதன் அதைக் கேட்டு நடுங்கினான். “நான் தேவரையும் மூவரையும் சித்தரையும் முத்தரையும் மயக்குவேன். அனல் வடிவான சிவபெருமானை மயக்க முடியுமோ? அவர் கையுந்தழல்; கண்ணுந்தழல்; மெய்யுந்தழல்; தழலைப் புழு அணுகுமோ?” என்றெல்லாம் கூறினான் மன்மதன். அயன் முதலிய அமரர் வற்புறுத்தி யனுப்பினார்கள். அதனால் சிவன் பாதத்தில் “கருத்தார்” என்றார். மருத்து ஊர். மருத்து-காற்று. மன்மதனுக்குத் தென்றல் காற்று. தேர் தென்றற் காற்றாகிய தேரில் ஊர்பவன். குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல் முடக்கோடு முன்னம் அணிவாற்கு-வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத் தில்லையதன் மேற்கொள்ளல் ஊருடையான் என்னும் உலகு - சிவப்பிரகாசர். கணுக்கான முத்தே:- “சிவபெருமானுடைய கண்ணுக்குப் பிரியமான முத்தையரே! என்று அருமையாக அருணகிரிநாதர் அழைக்கின்றார். கருத்துரை கதிர்காமக் கடவுளே! உன் கழல் தாமலையைத் தந்தருள்வீர். சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற் சகலயோ கர்க்குமெட் டரிதாய சமயபே த்தினுக் கணுகொணா மெய்ப்பொருட் |