பக்கம் எண் :


294 திருப்புகழ் விரிவுரை

 

டருபரா சத்தியிற்   பரமான
துரியமே லற்புதப் பரமஞான த்தனிச்
சுடர்வியா பித்தந்ணு   பதிநீடு
துகளில்சா யுச்சியக் கதியை யீறற்றசொற்
சுகசொரு பத்தையுற்   றடைவேனோ
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
புருஷவீ ரத்துவிக்    ரமசூரன்
புரளவேல் தொட்டகைக் குமரவேள் மைத்திருப்
புகழையோ தற்கெனக்    கருள்வோனே
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
கனிகள் பீறிப்புசித்    தமராடிக்
கதலிசூத த்தினிற் பயிலுமீ ழத்தினிற்
கதிரகா மக்கிரிப்    பெருமாளே.

பதவுரை

புரிசை சூழ்-திருமதில்களால் சூழ்பெற்ற, செய் பதிக்கு உரிய சாமர்த்ய-வயலூர் என்னும் திருத்தலத்துக்கு உரியவராகிய சமர்த்தரே! சத் புருஷ-சிறந்த ஆண்டகையே! வீரத்து விக்ரம சூரன்-மிகுந்த வீர முடைய சூரபன்மன், புரள வேல் தொட்ட கை குமர-பதைத்து வீழ்ந்து புரளுமாறு வேற்படையை விடுத்தருளிய குமாரக் கடவுளே! மேன்மை திருப்புகழை ஓதற்கு எனக்கு அருள்வோனே-மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுதற்கு அருள்புரிபவரே! கரிய யூக திரள்-கரிய குரங்குக் கூட்டம், பலவின்மீதில்-பலாமரத்தின் மீது தாவி, சுளைகனிகள் பீறி புசித்து-சுளைகளோடு கூடிய பழங்களைக் கிழித்து உண்டு, அமர் ஆடி-ஒன்றுடன் ஒன்று போர் புரிந்து, கதலிருதத்தினில் பயிலும்-வாழை மா ஆகிய சோலைகளில் நடமாடுகின்ற, ஈழத்தினில்-ஈழநாட்டில் சிறப்புற்று விளங்கும், கதிர, காம கிரி பெருமாளே-கதிர்காம மலையில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே! சரியை யாளர்க்கும்-சரியை மார்க்கத்தினருக்கும், அ கிரியையாளர்க்கும்-அந்த கிரியை மார்க்கத்தினருக்கும், நல் சகலயோகர்க்கும், எட்ட அரிதாய-எட்டுதற்கு அரியதானதும், சமய பேதத்தினுக்கு -? ஒன்றோடொன்று பேதித்துத் தர்க்க மிடுகின்ற சமயங்களாலே அணுக ஓணா சிவத்தையடையச் செய்கின்ற, பராசத்தியில்-பெரிய அருளில் அடங்கி, பரம் ஆன- பெரியதான, துரியமேல்-துரியாதீதத்தில், அற்புத பரம ஞானி தனிசுடர் வியாபித்த நல்பதி-அற்புதமான மேலான சுத்தஞானமயமாகிய ஒப்பற்ற, ஜோதி நிறைந்த நல்ல பதியாக விளங்குவதும், நீடு-நித்தியமானதும், துகள் இல்