சமயபேதம்:- சமயங்கள் பல. அவை ஒன்றுடன் ஒன்று பிணங்குவனவே. “விபரித சமய கலைகளு மலமலம்” - (அவருமிடை) திருப்புகழ் “கலகல கலெனக்கண்ட பேரொடு சிலுகிடு சமயப்பங்க வாதிகள்”- (அலகிலவுணரை) திருப்புகழ் “பேதித்த சமயமேர் ஒன்று சொன படியொன்று பேசாது” - தாயுமானார். துரிய மேலற்புத பரமஞானத்தனி சுடர்வியாபித்த நற்பதி:- கற்சுவர் போன்ற தூலதேக வுறையும், பளிங்குச்சுவர் போன்ற சூக்குமதேக வுறையும், மெல்லாடை போன்ற குண சரீர வுறையும், பாம்புரி போன்ற கஞ்சுக சரீர வுறையும், பால்நுரை போன்ற காரண சரீர வுறையும் மாகிய ஐவதை யுறையினயைுங் கவித்துக் கொண்டு ஜீவான்மா வசிக்கின்றது. இங்ஙனம் வகுக்கப்பட்ட அன்ன மயகோச மென்ற தூல சரீரத்தின் கண்ணின்று ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் ஜாக்கிரம் எனப்படும். அப்போது கருவி 35. மெய் வாய் கண் நாசி செவி (ஞானேந்திரியம்) | 5 | வாக்கு பாணி பாதம் பாயுறு உபஸ்தம் (கன்மேந்திரியம்) | 5 | மனம் புத்தி சித்தம் அகங்காரம் (கரணம்) | 4 | | சப்த பரிச ரூப ரச கந்தம் (தன்மாத்திரை) | 5 | வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தம் (கன்மமம்) | 5 | பிராணன் அபானன் உதானன் வியானன் | | சமானன் நாயகன் கூர்மன் கிரிதரன்
| | தேவதத்தன் தனஞ்சயன் (வாயு)
| 10 | புருடன் | 1 | ஆக | 35 |
பிராணமயகோச மென்ற சூட்சும சரீரத்தின் கண்ணின்று ஆன்மாவின் அறிவு விளங்கப் பெறுகின்ற அவசரம் சொப்பனம் எனப்படும். அப்போது கருவி 25. கன்மேந்திரியம் 5 உம், ஞானேந்திரியம் 5 உம் நீங்க ஏனைய தத்துவங்களாம். |