பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 299

 
192

பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
யோதர நெருக்குற்ற                                     இடையாலே
பாகளவு தித்தித்த தீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி                                விடுமாதர்
காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தி                                     லதிமோக
காமுகன கப்பட்ட வாசையை மறப்பித்த
கால்களைம றக்கைக்கும்                             வருமோதான்
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த                                     அரியமான்
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்னத்ரி
கோணசயி லத்துக்ர                                     கதிர்காம
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
மேகலை யிடைக்கொத்தி                            னிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களி லகப்பட்ட                                     பெருமாளே

பதவுரை

தேர்இரவி-தேரிலே வருகின்ற சூரியன், உட்கிபுகா-அஞ்சி உள்ளே புகாத, முது புரத்தில்-பழைய ஊராகிய இலங்கையில், தெசா சிரனை மர்த்தித்த-பத்துத் தலைகளையுடைய இராவணனைப் பிசைந்து கடைந்த, அரிமாயன்-திருமாலின், சீர்மருக-சிறந்த மருகரே! அதி உக்ர அதிக உக்கிரமான. யானைபடும்- யானைகள் எதிர்ப்படும், ரத்ன அத்ரி-இரத்தினங்கள் கிடைக்கும் மலையாகிய, கோண சயிலத்து-திருக்கோண மலையில் வீற்றிருக்கும், உக்ர கதிர்காம- உக்ரமான கதிர்காமக் கடவுளே! வீர-வீரமூாத்தியே! புனவெற்பில்-தினைப்புனம் நிறைந்த வள்ளி மலையில், கலாபி எயினச்சிக்கு-மயில்போன்ற வேடப் பெண்ணின், மேகலை இடை-மேகலை யணிந்த இடையிலும், கொத்து இன் இருதாளின்-பூங்கொத்துக்கள் உடைய இனிய இருதாள்களிலும், வேரி மழையில்-வாசனைதங்கிய மேகம் போன்ற கூந்தலிலும், பச்சை வேயில்-பசிய மூங்கில் போன் தோள்களிலும், அருண கற்றை வேல்களில்-சிவந்த ஒளித்திரளைக் கொண்ட வேல் போன்ற கண்களிலும், அகப்பட்ட-சிக்கிக் கொண்ட, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! பாரவித-பாரங்கொண்டதும், முத்தம்-முத்துமாலை யணிந்து, படீர-சந்தனம்