பராபர:- பரம்-மேலானது.பராபரம்-மேலான பொருள் அனைத்துக்கும் மேலான பொருள். வராம்ருத:- அம்ருதம்-அழிவில்லாதது.அடியார்க்கு கேட்ட வரங்களையருள வல்ல அழியாத பொருள் இறை. சிராதிக:- சிரம் -தலைமையானது, அதிகம் - மேம்பட்டது. மேலான முதற்பொருள். நிராச:- ஆசையில்லாதது நிராசை. இறைவன் ஒன்றிலும் விருப்பில்லாதவன். சிவராஜதவராஜர்கள்பராவிய:- சிவத்தடன் ஒன்றிய தவமன்னர்கள் துதி செய்கின்ற பொருள். நிராயுதபுராரி:- ஆயுதம் இன்றி சிரித்துப் புரங்களை எரித்தவர் சிவமூர்த்தி. அச்சுதன்:- அச்சுதன் - அழிவில்லாதவன். திருமால் வேதா:- வேதங்களில்வல்ல பிரமன். சொரூபமிவர்:- விண் மண் சராசரம்ஆகிய எல்லாவற்றிலும் கலந்தவர் இறைவன். இவர் தல்-கலத்தல். “கரியானை நான்முகனைக்கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக்கலந்து நின்ற பெரியானை” - அப்பர் எல்லாவற்றிலும்இறைவன் கலந்து நிற்பினும் உலகமாயை அவரைப் பற்றாது. கடலில் பிறந்து, உவர்நீரைப் பருகி, உவர்நீரிலே வாழுகின்ற கடல்மீனுக்கு உவர் பற்றாதததுபோல், இறைவன் எங்கும்கலந்து நிற்பினும் உலகமாயை அவரைச் சேராது என்று அறிக. ஆதியைக்குறியாமே:- ஆதிப்பொருளாகிய இறைவனைத் தியானிதது அசைவற்றிருக்க வேண்டும். இது உய்யும் நெறி. துரால்புகழ்:- துரால்-செத்தை, செத்தைபோன்ற பயனற்ற புகழைப் பெற்று பலர் வாடுகின்றார்கள். |