பக்கம் எண் :


300 திருப்புகழ் விரிவுரை

 

பூசப் பெற்றதும், புளக-புளகாங்கிதங் கொண்டதும், பொன் பயோதர-அழகியதும் ஆகிய தனங்களால், நெருக்க உற்ற இடையாலே-நெருக்குண்ணும் இடையாலும், பாகு அளவு தித்தித்த-சர்க்கரைப்பாகு போல் தித்தித்த, கீத மொழியில்-கீதம் போன்ற இனிய மொழிகளாலும் புடப்பாண வழியில்-மன்மதனுடைய மலர்க் கணைகள் போல் தைக்கும் கண்களாலும், பொத்தி விடும் மாதர்-ஆண்களை ஆசைமயக்கத்தால் மூடிவிடுகின்ற பொது மாதர்களின், கார் அணிகுழல் கற்றை மேல்-மேகம் போன்ற கூந்தல் கட்டினாலும், மகரம் ஒப்பித்த காதில்-மகர மீன்போன்ற குழை யணிந்த காதினாலும், முகவட்டத்தில்-முக மண்டலத்தினாலும், அதிமோக-அதிக மோகங் கொண்ட, காமுகன்-காமியாகிய அடியேன், அகப்பட்ட ஆசையை மறப்பித்த-சிக்கிக் கிடந்த ஆசையை அடியோடு மறக்கச் செய்த, கால்களை மறக்கைக்கும் வருமோதான்-உமது திருவடிகளை மறக்கவும் கூடுமோ?(மறவேன்).

பொழிப்புரை

தேரில் வருகின்ற சூரியபகவான் அஞ்சி உள்ளே புகமாட்டாத பழைய ஊராகிய இலங்கையில் பத்துத் தலைகளையுடைய இராவணனைக் கலக்கிக் கடைந்த திருமாலின் சிறந்த மருகரே! மிகுந்த வேகமுடைய யானைகள் எதிர்ப்படும், இரத்தின மணிகள் கிடக்கும் திருக்கோண மலையில் வீற்றிருக்கும், உக்கிரமான கதிர்காமக் கடவுளே! வீரமூர்த்தியே! தினைப்புனத்துடன் கூடிய வள்ளிமலையில், மயில் போன்ற வேடப் பெண்ணாகிய வள்ளி நாயகியின் மேகலை யணிந்த இடையிலும், பூங்கொத்துக்களுடைய இனிய இருதாள்களிலும், வாசனை தங்கிய மேகம் போன்ற கூந்தலினாலும், பசிய மூங்கிலை யொத்த தோள்களிலும், சிவந்த ஒளிவிடும் கூரிய வேல் போன்ற கண்களிலும் சிக்கிக் கொண்ட பெருமிதமுடையவரே! பாரங் கொண்டதும், முத்துமாலை அணிந்ததும், சந்தனம் பூசப்பட்டதும், புளகாங்கிதங் கொண்டதும், அழகியதுமான தனங்களால் நெருக்குண்ணும் இடையினாலும், மன்மதனுடைய மலர்க்கணைகள் போன்ற கண்களாலும், ஆடவர்களைக் காம மயக்கத்தில் மூடிவிடுகின்ற பொது மாதர்களின் மேகம் போன்ற கூந்தல் கட்டினாலும், மகர மீன் போன்ற குழைகளையுடைய காதுகளினாலும், முகமண்டலத்தாலும், அதிமோகங் கொண்ட, காமியாகிய அடியேன், சிக்கிக்கிடந்த ஆசையை அடியுடன் மறக்கும்படிச் செய்து உமது திருவடிகளை மறக்கவும் வருமோ? (ஒருபோதும் மறவேன்)