பக்கம் எண் :


302 திருப்புகழ் விரிவுரை

 
193

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு                                      மதனாலும்
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு                                           மதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த                                  மெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க                                  வரவேணும்
கரிகள்சேர் வெற்பி் லரியவே டிச்சி
கலவிகூர் சித்ர                                           மணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தி                                         லுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை                                  மயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர்கெட்டு
முறியவேல் தொட்ட                                  பெருமாளே

பதவுரை

கரிகள் சேர்வெற்பில்-யானைகள் வாழும் மலையில், அரிய வேடிச்சி - அருமையான வள்ளிபிராட்டியின், கலவி கூர்-கலவியின்பம் மிகுந்த சித்ர மணி மார்பா-அழகிய மணிகள் நிறைந்த திருமார்பினரே! கனகமாணிக்க வடிவனே- பொன்னில் பதித்த மாணிக்கம் போன்ற உருவினரே! மிக்க கதிர காமத்தில் உறைவோனே-சிறந்த கதிர்காமத்தில் வாழ்கின்றவரே! முருகனே-முருகக் கடவுளே! பத்தர் அருகனே-அடியார்களின் அருகில் இருப்பவரே! முத்தி முதல்வனே-முத்தியுலக்கிற்குத் தலைவரே! பச்சை மயில்வீரா-பச்சைமயிலில் வரும் வீரமூர்த்தியே! முடுகி மேல் இட்ட-விரைந்து வந்து மேலிட்டு எதிர்த்த, கொடிய சூர் கெட்டு முறிய-கொடுமையான சூரன் கெட்டு அழியுமாறு, வேல் தொட்ட-வேலை விடுத்த, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! மரு அறா- வாசனை நீங்காததும், வெற்றி மலர் தொடா-வெற்றி பெறுவதுமான மலர்க்கணைகளை தொட்டுப் பயிலும், வில்கை-வில்லைக் கையில் பிடித்து, வலி செயா நிற்கும்-வலிமையைச் செய்து நிற்கும், மதனாலும்-மன்மதனாலும், மதில்கள் உற்ற-மதில்களைத் தாண்டி வருகின்ற, கலை படா-கலைகள் குறையாத, வட்டமதி-வட்டமாயுள்ள சந்திரன், சுடா நிற்கும் அதனாலும்-சுட்டு நிற்பதனாலும்,