பக்கம் எண் :


306 திருப்புகழ் விரிவுரை

 

நாதம்-ஒலி. ஒலி, ஒலி ஒளியெல்லாம் இறைவன்தான்.

“ஓசை ஒளியெலாம் ஆனாய் நீயே”                   - அப்பர்

நாரியிரு வோரைப் புணர்வோனே:-

வள்ளியம்மை - மண்ணுலக மடந்தை. தெய்வாயனை-விண்ணுலக மடந்தை. வள்ளியைக் கொண்டு இகலோக வாழ்வும், தெய்வயானையைக் கொண்டு பரலோக வாழ்வும் முருகப் பெருமான் வழங்குவார்.

சோதி சிவஞானக் குமரேசா:-

ஆணவ இருளையகற்றும் ஜோதி வடிவானவர் முருகர். சிவஞானத்தை வழங்குபவர்.

தோமில் கதிர்காமப் பெருமாளே:-

தோம்-குற்றம்.

குற்றமே இல்லாத புனிதமான திருத்தலம் கதிர்காமம். வணங்குபவர்களின் குற்றத்தைக் களைய வல்லது.

கருத்துரை

கதிர் காமக் கடவுளே! மாதர்வசமாவோரும், இறைவழிபாடு செய்யாதாரும் நரகில் புகுவார்கள்.

195

முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
முனியு மார வார முற்ற                                      கடலாலே
முடிவி லாத தோர்வடக்கி லெரியு மால மார்பி டத்து
முழுகி யேறி மேலெ நிக்கு                                     நிலவாலே
வெதிரி லாயர்வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
வினைவி டாத தாய ருக்கு                                   மழியாதே
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
விகட மாதை நீயணைக்க                                வரவேணும்
கதிர காம மாந கர்க்கு ளெதிரி ஙாத வேல்த ரித்த
கடவு ளேக லாப சித்ர                                       மயில்வீரா
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொருத்தி                                     மணவாளா
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
அரிய ஞான வாச சத்தை                                யருள்வோனே