பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 307

 

அகில லோக மீது சுற்று யசுரர் லோக நீறெ ழுப்பி
அமரர் லோகம் வாழ வைத்த                               பெருமாளே

பதவுரை

கதிரகாம மாநகர்க்கு உள்-கதிர்காம மா நகரத்தில், எதிர் இலாத வேல் தரித்த கடவுளே-ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே! கலாப சித்ர- தோகையின் அழகு வாய்ந்த, மயில் வீரா-மயிலில் வரும் வீர மூர்த்தியே! கயல் உலாம் விலோசனத்தி-மீன்போன்ற சிறந்த கண்களை யுடையவளும், களபம் ஆர் பயோதரத்தி-சந்தனக் கலவை அணிந்த தனங்களையுடையவளும், ககனமேவுவாள் ஒருத்தி-விண்ணுலகத்தில் வீற்றிருப்பவளுமாகிய தேவசேனையின், மணவாளா-கணவரே! அதிர வீசி ஆடும்-உலகங்கள் அதிரும்படி கைகளையுங் கால்களையுங் வீசியாடுகின்றவரும், வெற்றி விடையில் ஏறும்-வெற்றியுடைய இடபத்தின் மீது ஆரோகணிக்கின்றவரும், ஆகிய., ஈசர் கற்க-சிவ பெருமான் அறியுமாறு, அரிய ஞான வாசகத்தை- அருமையான ஞான உபதேச மொழியை, அருள்வோனே-அருளியவரே! அகில லோக மீது சுற்றி-எல்லாவுலகங்களிலும் சுற்றிவுலாவி, அசுரர் லோகம் நீறு எழுப்பி-அசுரர்கள் வாழ்ந்த உலகங்களை தூளாக்கி, அமரர் லோகம் வாழவைத்த-தேவலோகத்தை வாழ வைத்த, பெருமாளே-பெருமையிற் சிறந்தவரே! மார வாரம் முதிருூம நட்பொடு-மன்மதனுக்கு உரிய அன்பு முதிர்ந்த நட்புடன், இலகும் ஆர் அ ஆரம் எற்றி-ஒளி பொருந்திய அந்த முத்துக்களை கரையில் வீசி, முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே-கோபிக்கும் பேரொலி பொருந்திய கடலினாலும், முடிவு இலாதது-அழிவில்லாததாய், ஓர் வடக்கில்-ஒப்பற்ற கடலின் வடக்கில், எரியும்-ஊழித்தீயாம் வடவைக் கனல் போல் எரிவதாய், ஆலும் ஆர்பு இடத்து முழுகி-விஷம் நிறைந்து தோன்றிய இடமாம் கடலில் முழுகி, ஏறி மேல் எறிக்கும் நிலவாலே-மேல் எழுந்து கிரணங்களை வீசும் சந்திரனாலும் வெதிரில் ஆயர் வாயில் வைத்து- வேங்குழலை இடையர் வாயில் வைத்து, மதுர ராகம் நீடு இசைக்கும்- இனிமையான பண்களை நெடுநேரம் கேட்கச் செய்யும் இசை யொலியினாலும், வினைவிடாத தாயருக்கும்-தமது தொழிலை விடாத தாய்மாருக்கும், அழியாதே- அழியாமல், விளையும் மோக போகம் முற்றி-உண்டகின்ற காமபோகமே நிரம்பி, அளவு இலாத காதல் காதல் பெற்ற-அளவு கடந்த ஆசைகொண்டுள்ள, பிகடமாதை-இந்த அழகிய பெண்ணை நீ அணைக்க வரவேணும்-தேவரீர் பொருட்டு வந்தருளவேண்டும்.

பொழிப்புரை

கதிர்காம மாநகருக்குள் எழுந்தருளியிருக்கும் ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே! அழகிய தோகைகொண்ட மயிலையுடைய வீர மூர்த்தியே! மீன் போன்ற கண்களையுடைய