பக்கம் எண் :


308 திருப்புகழ் விரிவுரை

 

வளும், சந்தனக்கலவை நிறைந்த தனங்களையுடையவளும் விண்ணுலகில் வாழ்பவளுமாகிய தேவசேனையின் கணவரே! விண்ணும் மண்ணும் அதிருமாறு கரசரணங்களை வீசி நடனம் ஆகின்றவரும், வெற்றிவிடையில் ஏறுபவருமாகிய சிவ பெருமாள் உணருமாறு, அருமையான சிவஞாக உபதேசமொழியை அருளியவரே! எல்ல உலகங்களையுஞ் சுற்றி, அசுர உலகங்களைப் பொடியாகச் செய்து, அமர உலகத்தை வாழ வைத்த பெருமிதம் உடையவரே! மன்மதனுக்கும் அன்பு முதிர்ந்த நட்புடன், ஒளி நிறைந்த அந்த முத்துக்களைக் கரையில் எறிந்து கோபிக்கும் பேரொலியுடைய கடலினாலும், அழிவில்லாத வடவைத் தீயைப் போல் எரிவதாய், ஆலகால நஞ்சு தோன்றிய கடலில் முழுகி எழுந்து மேலே கிரணங்களை வீசுவதாயுள்ள நிலவினாலும், புல்லாங்குழலை இடையர்கள் வாயில் வைத்து இனிய பண்களை நீண்ட நேரம் ஒலிக்கும் இன்னிசையினாலும், தம் தொழிலை விடாத தாய்மாருக்கும், அழியாமல், உண்டாகின்ற காமபோகம் நிரம்பி அளவு கடந்த காதல் கொண்டுள்ள, இந்த அழகிய பெண்ணைத் தேவரீர் தழுவிக் கொள்ளும் பொருட்டு வந்தருள வேண்டும்.

விரிவுரை

இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் பாடியது.

முதிரு மார வார நட்பொடு:-

மாரன்-மன்மதன். வாரம்-அன்பு.

சமுத்திரம் மன்மதனுக்கு துந்துபி வாத்தியமாக விளங்குவது. மன்மதனுக்கு முதிர்ந்த அன்புடன் கூடிய நட்பு பூண்டது.

இலகுமார வார வெற்றி:-

இலகும் ஆர் அ ஆரம் எற்றி.

இலகும்-ஒளி; ஆர்-நிறைந்த; அ-அந்த; ஆரம்-முத்து.

அலைகாளகிய கரங்களால் கடல் முத்தைக் கரையில் எறிகின்றது.

முனியு மார வார முற்ற கடல்:-

முனியும் ஆரவாரம் உற்ற. ஆரவாரம்-பேரொலி.

இந்த அடியில் மார வார என்ற சொற்களை மூன்று இடங்களில் வெவ்வேறு பொருள்களில் அமைந்துள்ள கவித்திறம் மிகவும் வியத்தற்குரியது. கடல், தலைவன் தலைவிக்குக் காதல் நோயை அதிகப்படுத்தும். “தொல்லை நெடு நீலக்கடலாலே” என்று பிறிதொரு திருப்புகழிலும் கூறுகின்றார்.