பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 31

 

பராதின:-

பிறருக்கு அடிமைப்பட்டு நிற்கின்றார்கள்.

கராவுள:-

கரா-முதலை. முதலைபோன்ற கடின மனம் படைத்தவர்கள். “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்பது பழமொழி. அதுபோல் தீமையை விடாது பற்றிக் கொண்டிருக்கும் உள்ளம் கராவுளம்.

பராமுகம்:-

இறைவனை நோக்காமல்வேறுவழியில் திரும்பியமுகம் பராமுகம்.

துரோகரைதராசையுற்றடைவேனோ:-

தரை-ஆசை-தராசை, மண்ணின்மீது ஆசைவைத்த பாவிகளை அடைதல் கூடாது.

இராகவ இராமன்:-

இரகு என்பன் சூரியகுலத்துத் தோன்றிய சிறந்தமன்னன். அவன் குலத்திற பிறந்தவர் இராமர். அதனால் இராகவர் என்று பேர் பெற்றார். இராமன்- அழகுடையவன்.

இராவண இராவண இராவண இராஜன்:-

இராவணன் -அழுதவன். இராவணன்-இரவில் கரிய நிறமுடையவன். இராவண இராஜன் - இராவணனாகிய அரசன். இராவணனைப் பற்றி விளக்கத்தைத் திருப்புகழ் விரிவுரை ஐந்தாம் தொகுதி 24ஆம் பக்கம் பார்க்கவும்.

இராகன்மலராணிஜபுராணர்:-

இராகன் மலர்ஆள் நிஜ புராணர். இராகம் - அன்பு - திருமால் சக்கராயுதம் பெறும்பொருட்டுத் திருவீழிமிழமையில் தினம் ஒன்றுக்கு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சித்து, சிவமூர்த்தியை வழிபட்டு வந்தார்.

அவருடைய அன்பைக்காணும்பொருட்டுச் சிவ பெருமான் ஒரு மலரை மறைத்தருளினார். அர்ச்சனை புரிந்து கொண்டிருந்த திருமால் ஒருமலர் குறைந்தது கண்டு, தாமரைமலர் போன்ற தமது விழியை எடுத்து அருச்சித்தார். சிவபெருமான் அவருடைய அன்புக்கு உவந்து சக்ராயுதத்தை வழங்கியருளினார்.

“நயனார்ப்பணம்” என்ற இந்தச் செய்தியை ஆதிசங்கரர் சிவானந்தலகரியிலும் கூறுகின்றார்.

“..........................மாசலந்தரன் நொந்துவீழ
   உடல்தடியுமாழி தாவெனம்புய
  மலர்கள் சதநூறு தானிடும்பகல்