வினைவி டாத தாயருக்கு மழியாதே விகட மாதை நீயணைக்க வரவேணும் கடவு ளேக லாப சித்ர மயில்வீரா ககன மேவு வாளொருத்தி மணவாளா அரிய ஞான வாச கத்தை யருள்வோனே அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே கருத்துரை கதிர்காமக் கடவுளே! உன்னை நினைந்து வருந்தும் இப்பெண்ணைத் தழுவியருள நீ வரவேண்டும். வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று தொடர்போது மடிபிடிய தாக நின்று மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று வசைகளுட னேதொடர்ந்து அடைவார்கள் கருவியத னாலெ றிந்து சதைகள்தன யேய ரிந்து கரியபுன லேசொ ரிந்து விடவேதான் கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு கடுகிவர வேணு மென்றன் முனமேதான் பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன் பழநிதனி லேயி ருந்த குமரேசா பதிகள்பல வாயிரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற பதமடியர் காண வந்த கதிர்காமா அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை யணிவர்சடை யாளர் தந்த முருகோனே அரகர சிவாய சம்பு |