பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 311

 

குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த பெருமாளே

பதவுரை

பரகிரி-திருப்பரங்குன்றத்திலும், உலாவு செந்தி மலையில் உடனே- திருவுலா இடையறாது நிகழ்வதாகிய திருச்செந்தூர் என்ற சந்தன மலையிலும், இடும்பன் பழநிதனிலே-இடும்பனால் கொணரப்பட்ட பழநி மலை மீதும், இருந்த- எழுந்தருளியிருக்கும், குமர ஈசா-குமாரக் கடவுளே! பதிகள் பல ஆயிரங்கள்- பல்லாயிரக்கணக்கான திருத்தலங்களிலும், மலைகள் வெகு கோடி- கோடிக்கணக்கான மலைகளிலும், நின்ற-நிலையாக இருந்து, பதம் அடியர் காணவந்த-திருவடியைக் கண்டு அடியவர்கள் நலம் பெறுமாறு வந்தருளிய, கதிர் காமா-கதிர்காமக் கடவுளே! அரவு - பாம்பையும், பிறை-பிறைச் சந்திரனையும், பூனை-பூனைப் பூவையும், தும்பை-தும்பை மலரையும், விலுவமொடு வில்வத்தையும், தூர்வை-அறுகம்புல்லையும், கொன்றை- கொன்றைப் பூவையும், அணிவர் சடையாளர்-சடைமீது தரித்துக் கொண்ட சிவபெருமான், தந்த-பெற்றருளிய, முருகோனே-முருகப் பெருமாளே!அரகர- பாவங்களை நீக்குபவரும், சிவாய என்ற மூன்று எழுத்துக் குருநாதரே! குமார- குமாரக்கடவுளே! நம்பும் அடியர்தமை ஆளவந்த-எப்போதும் நீயே கதியென்று நம்பியுள்ள அடியார்களை ஆட்கொள்ளும் பொருட்டு வந்த-பெருமாளே- பெருமிதம் உடையவரே! ஓலை கொண்டு வருபவர்கள்-இயமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருபவர்களாகிய காலதூதர்கள், இயமனுடைய தூதர் என்று- மடியில் கைபோட்டுப் பிடிப்பதுபோல நின்று, தொடர் போது-அடியேனைத் தொடர்கின்ற பொழுதில், மயலது பொலாத வம்பன்-இவன் மயக்கமுடைய பொல்லாதவனாகிய வம்புக் காரன் என்றும், விரகு உடையன் ஆகும் என்று- வஞ்சனைக்காரன் ஆகும் என்றும், வசைகள் உடனே தொடர்ந்து- வசைசொற்களுடனே தொடர்ந்து, அடைவார்கள்-என் உயிரைதொடர்ந்து- நெருங்கி வருவார்கள். கருவி அதனால் எறிந்து-(என் உயிரைப் பற்றிக்கொண்டுபோய் கூற்றுவன் முன் நிறுத்தி) ஆயுதங்களினால் என்னைத் துன்புறுத்தி, சதைகள்தனையே அரிந்து-சதைகளைத் துண்டு துண்டாகச் சேதித்து, கரிய புனலே சொரிந்து விடவேதான்-இரும்பை உருக்கிய நீரை என் வாயிலே இட்டு, கழு முனையிலே இரு என்று விடும் எனும்-கழுவின் முனையிலே கிடத்தி என்று என்னை கழுவில் ஏற்றிவிடுகின்ற, அவ்வேளை கண்டு-அவ்வேளையில் சிறியேனுடைய துன்பத்தைப் பார்த்து என்றன் முனம் கடுகி வரவேணும்-அடியேன் முன் விரைந்து வந்தருளவேண்டும். (ஏ, தான்- ஆசைகள்)