பக்கம் எண் :


312 திருப்புகழ் விரிவுரை

 

பொழிப்புரை

திருப்பரங்குன்றத்திலும், திருவுலா வருவதற்கேற்ற செந்திலம்பதியாகிய சந்தன மலையிலும், இடும்பனால் கொணரப் பெற்ற பழநிமலையிலும், எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே! ஆயிரக் கணக்கான திருத்தலங்களிலும், கோடிக்கணக்கான மலைகளிலும் விளங்கி, திருவடிமலைரை அடியார்கள், தெரிசித்து உய்யுமாறு வந்தருளும் கதிர்காமக் கடவுளே! பாம்பு, பிறைமதி, பூளைப்பூ, தும்பைமலர், வில்வம், அறுகு, கொன்றைப்பூ, இவற்றை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமுான் பெற்றருளிய குமாரமூர்த்தியே! பாவங்களை நீக்குபவரும், மூவெழுத்தின் முதல்வரும் சுககாரணருமாகிய சிவமூாத்தியின் குருநாதரே! நம்புகின்ற அடியவரை ஆட்கொள்ளவந்த பெருமிதமுடையவரே! இயமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு கால தூதர்கள் வந்து “நாங்கள் இயமனுடைய தூதர்” என்று கூறி மடியைப் பிடித்து இழுப்பதுபோல் நின்று தொடர்கின்ற போது, “இவன் மயக்கமிக்க பொல்லாம் வம்பன்; வஞ்சனைக்காரன்” என்ற வசைமொழிகளைக் கூறி, என்பால் நெருங்கு வார்கள்; (அவ்வடி வந்த கால தூதர் என்னைப் பற்றிக் கொண்டுபோய் இயமனுக்கு முன் நிறுத்தி) ஆயுதங்களால் துன்புறுத்தி சதைகளை யரிந்து, உருக்கிய இரும்பு நீறை என் வாயில் விட்டு கழுவின் முனையில் ஏற்றிவிடுகின்ற, காலத்தில் எனது துன்பத்தைக் கண்டு கருணை புரிந்து, விரைந்து அடியேன் முன் வரவேணும்.

விரிவுரை

வருபவர்களோலைகொண்டு:-

தீவினை செய்த உயிர்களைக் கொண்டுபோகும் பொருட்டு இயமதூதர் வருவர். அவ்வாறு வரும்போது இயமனுடைய ஓலையையும் உடன் கொணர்வர். இதனைப் பின்வரும் திருவாக்குகளாலும் அறிக.

“அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடையவனரவ தண்டச் சண்டச் சமனோலை
அதுவருகு மளவில்”        - திருப்புகழ்

“ஏட்டின் விதி வழி ஓட்டமறிகிலை” - (பாட்டிலுருகிலை) திருப்புகழ்

“ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாடல் ஒழித்தெனக்குக்
   காலையுமாலையு முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்