பலகாலும்வேண்டியதனால் தரப்பட்டது. அரிய இம்மனித உடம்பினால் தனக்கும் பிறர்க்கும் நலஞ் செய்ய வேண்டியரை விட்டு, சலஞ் செய்தபடியால், இயமதூதர் சினந்து தண்டிப்பர். நரிவெரூ உத்தலையார் என்ற சங்க காலத்துப் புலவர் கூறுகின்றார். பல்சான் நீரே! பல்சான்றீரே!! கயல்முள் அன்ன நரைமுதிர் திகைவுள் பயனில் மூப்பின் பல்சான்றீரே!!! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன் பிணிக்குங்காலை இரங்குவிர் மாதோ; நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லாரும் உவப்பது; அன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெயியுமாறதுவே. - புறநானூறு “பயனில்லமல் மூப்பு எய்திக்கிடக்கும் பலராகிய மூத்தோர்களே! கூர்மையான மழுவையேந்தியவனும், மிக்க வன்மையுள்ளவனுமாகிய கூற்றுவன் இனி விரைவில் வருவான்; அப்போது நீங்கள் வருந்துவீர்கள்; நல்லது அல்லாததாயினும் செய்யாமலிருக்க முயலுங்கள். அதுதான் இனி எல்லோரும் மகிழக் கூடியது. அல்லது செய்யாமல் காக்கும் அப்பழக்கம் ஒருகால் உங்களை நல்லது செய்யும் நெறியில் சேர்த்தாலும் சேர்க்கும்.” சதைகள் தனையே யரிந்து:- “கொன்றால்பாவம் தின்றால் போயிற்று” என்பது பழமொழி. அதவாது ஆடு கோழி பன்றி முதலிய வாயில்லாத உயிர்களைக் கொன்ற பாவம் தின்றுவிட்டால் போய்விடும் என்பது இதன் பொருள். அப்பாடியாயின் புலாலுண்ணல் மிகப்பெரிய பாவம் என்று திருவள்ளுவர் செப்பாரன்றோ? “உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு” என்பது அவர்திருவாக்கு. அங்ஙனமாயின்மேற் போந்த பழமொழியின் கருத்துதான் யாதோ எனின்பழமொழி ஒருபோதும் பிழைமொழியாது. உயிர்களைக் கொன்ற பாவிகளைக் கொண்டுபோய் இயமதூதுவர்கள், நரகில் கிடத்தி அவர்கள் மாமிசத்தை யறுத்து அறுத்து அவர்கள் வாயில் ஊட்டி “மாமிசத்தை யுண்ட மடையனே! இதோ உம் மாமிசத்தை யருத்து” என்று உண்பிப்பார். தன்னிறைச்சியைத் |