திருமேனியும், முப்புரிநூல் புரளும் திருமார்பும் தண்டு தாங்கிய திருக்கரமும் விளங்க நிற்க கண்டான். “ஏ! குழந்தாய்! நீ யார் மகன்? இங்கு நீ தனித்து நிற்கும் காரணம் யாது? வழிதவறி வந்தனை சொல்? விரைந்து சொல்” என்று வினவினான். முருகவேள் ஒன்றும் பதில் கூறாது முறுவல் புரிந்தனர். இடும்பன் ஆலகாலம் போல் சீறி, “ஏ மைந்தா! மலையினின்றும் இறங்கி விலகிப்போ; யான் கொலையே புரியும் அசுரகுல குரு. வீணே துன்பத்தைத் தேடிக்கொள்ளாதே.” என்றான். குழந்தை வேலவர் நகைத்து “அப்பா அசுரனே! இம்மலை எமக்கு இருக்கையாகும். உனக்கு வலிமையிருக்குமாயின், இவற்றை எடுத்துக்கொண்டு போ” என்றனர். இடும்பன் மிகவுஞ் சினங்கொண்டான். “ஏ, பாலகனே! நீ மாயையில் வல்லவன் போலும். நன்று; நன்று. நான் மாயவனைச் சிவனாகக் குறுகச் செய்தருளிய குறுமுனிவரது அடியவன். உன் செருக்கையும் மாயையையுங் காண்கின்றேன்.” என்று கூறிக் கரங்களைப் பிசைந்தான். பற்களைக் கடித்தான். வாயை மடித்தான்., புருவத்தை நெறித்தான். குராவடிக் குமரன் மீது பாய்ந்தான். குராவடிக் குழந்தை வேற்குமரக் கடவுள், தமது திருக்கரத்தில் விளங்கும் தண்டாயுத்தினால் சிறிது தாக்கினார். மூதண்ட முகடு உடைந்து வீழ்ந்தது போல் இடும்பன் அலறிவீழ்ந்து மடிந்தான். நாகங்களும் பிரமதண்டும் அஞ்சியகன்று அகத்தியனார்பால் சென்று அஞ்சலி செய்து நிகழ்ந்ததைப் புகன்று தத்தம் இருப்பிடஞ் சேர்ந்தன. இடும்பன் இந்த பேரொலியைக் கேட்ட இடும்பி உள்ளம் பதைபதைத்து ஓடிவந்து கணவன்மீது விழுந்து புலம்பினாள். “என் உயிர்த்துணைவா! குறுமுனியின் அருள்பெற்ற கொற்றவ! சூரர்க்கும் வில்வித்தை கற்பித்த வீராதிவீர! நின்னைக் கொன்ற வீரன் யாவன்? அந்ததோ? நினைவிழந்து நான் எங்ஙனம் வாழ்வேன்? பதியையிழந்த பாவியானேனே. தெய்வமே! நின் சோதனையோ! முன்புரிந்த வினையின் வாதனையோ?” என்று பலவாறு புலம்பி அழுதான், குராமரத்தின் நிழலில் நிற்குங் குழந்தையைக் கண்டாள். “இவர்தான் என் கணவரைக் கொன்றவர் போலும். சூரனைக் கொன்றவர்தான் சூரனது வில்லாசிரியராம் என் கொழுநரைக் கொல்லுதல் கூடும். இவர்தான் எம் குலமுழுது மாளவந்த குன்றம் |