ஒரு மலர்இலாது கோவணிந்திடு செங்கண்மாலுக் குதவிமகேசர்” (படர்புவியின்) - திருப்புகழ் பங்கயம் ஆயிரம்பூவினிலோர் பூக்குக்றையத் தங்கண் இடந்தரன்சேவடிமேற் சாத்தலுமே சங்கரன் எம்பிரான்சக்கரமாற் கருளியவாறு எங்கும் பரவிநாம்தோணோக்கம் ஆடாமோ. - திருவாசகம் மலர் பொருட்டு ஆட்கொண்ட பழமையான புகழையுடைய சிவபெருமான். கலையிராஜ சொல்வாரணர்:- கலைகள்புகழ்கின்ற அந்த யானைமுகமுடையவர் என்றும் பொருள் செய்யலாம். கலை இராஜ சொல் அவாரணர் எனப் பதப்பிரிவு செய்க. விராகவ:- வீர அயனம் பராயணம்.வீரவழியில் விருப்பம். செருவூர்:- செருவூர் - திருப்போரூர். குராவகில்பராரைமுதிர்:- பரு அரை-பராரை. குரா, அகில் முதலிய மரங்கள் பருத்த அடியுடன் முதிர்ந்து வளமையுடன் சூழ்ந்துள்ள தலம் விராலிமலை. கருத்துரை விராலிமலை வேலவா! ஆதிப்பொருளாகிய உன்னை இடையறாது தியானிக்க அருள்புரிவாய். இதமுறு விரைபுனல்முழுகி யகில்மண முதவிய புகையினி லளவி வகைவகை கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென அறலென இசையளி யெனந ளிருளென நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும் |