பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 321

 

அரவுபிறை:-

இறைவன் திருமுடிமீது பாம்பையும் பனிமதியையும் சூடியுள்ளார். பாம்புக்கும் சந்திரனுக்கும் புகை. இந்த இரண்டும் இறைவர்பால் ஒற்றுமைப்பட்டிருக்கின்றன.

ஹரகர:-

அரன்-பாவத்தைப் போக்குபவன். “ஹரஹர” என்று கூறுபவர் வல்வினை நீங்கப் பெறுவர்.

“ஹர ஹரா எனாமூடர்” - (இரதமான தேனூறல்) திருப்புகழ்

“ஹர ஹர” என்று முழங்கினால் உலகந் துயர் தீர்ந்து உயர்வு எய்தும்.

..................................”எல்லாம் அரன்நாமமே
   சூழ்க வையகமுந் துயர் தீர்க்கவே”    - ஞானசம்பந்தர்

சிவன்:-

இது திரியக்ஷம் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் நாவசையாமல் ஜெபிக்கும் அருள் நலமுடையது.

“சிவாய வெனு நாமமொரு கால நினையாத
       திமிராகரனை”           - அவாமருவி திருப்புகழ்

“ஹரஹர சிவாய வென்று தினமுநினையாமல்”                                                       - கருவினுரு திருப்புகழ்

கருத்துரை

பழநி மலை முதலிய எல்லா இடங்களிலும் விளங்கும் கதிர்காம முருகக் கடவுளே! இயமவாதனை மேடும்போது அடியேனைக் காத்தருளுவீர்.

அருக்கொணாமலை

197

தொடுத்த வாளெனவிழித்து மார்முலை
யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்ந்து மாவியல்          கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
துவிர்த்த வாய்குழல் விரித்து மேவிதழ்
துவிர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு          வழியேபோய்ப்