படுத்த பாயலி லணைத்து மாமுஐல பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ் கடித்து நாணம தழித்த பாவிகள் வலையாலே பலித்துநோய்பிணி கிடத்து பாய்மிசை வெளுத்து வாய்களு மலத்தி னாயென பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ருழல்வேனோ வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை விடுத்து யாகமும் நடத்தி யேயொரு மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் மருகோனே விதித்து ஞாலம தளித்த வேதனை யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல் விழித்து காமனை யெரித்த தாதையர்
குருநாதா அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி நடுக்க மாமலை பிளக்க வேகவ டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு மயில்வீரா அறத்தில் வாழுமை சிறக்க வேயறு முகத்தி னோடணி குறத்தி யானையொ டருக்கெ ணாமலை தருக்கு லாவிய பெருமாளே பதவுரை வெடுத்த தாடகை-வெடு வெடு என்று கோபித்து வந்த தாடகையின், சினத்தை ஓர் கணைவிடுத்து-கோபத்தை ஒரு கணைவிடுத்து, அடக்கியும், யாகமும் நடத்தியே-யாகத்தைக் காலம் செய்து நடாத்தியும், ஒரு மிகுத்தவார் சிலை முறித்த-ஓப்பற்றதும் சிறப்பு மிகுந்ததும் நீண்டதுமான வில்லைமுறித்தவரான, மாயவன் மருகோனே-திருமாலின் திருமருகரே! விதித்து- இது இப்படி இருக்க வேண்டும் என்று விதி செய்து, ஞாலம் அது அளித்த வேதனை-பூமியைத் தந்த பிரமதேவனை, அதிர்ந்து - அதிர்ச்சியுறச் செய்து, ஓர் முடி கரத்து உலாய்-அவனுடைய ஒரு தலையைத் தமது திருக்கரத்தில் உலாவ வைத்து, அனல் விழித்து-நெற்றிக் கனற் கண்ணைத் திறந்து, காமனை எதிர்த்த தாதையர்-மன்மதனை எரித்த தந்தையாரது, குருநாதா-குருநாதரே! அடுத்த- நெருங்கியுள்ள, ஆயிரவிடபணாமுடி நடுக்க-விடமுள்ள ஆயிரம் பணாமுடிகளையுடைய ஆதிசேடன் நடுங்கவும், மாமலை பிளக்க-கிரவுஞ்சமலை பிளவுபடவும், கவடு அரக்கர் மாமுடி பதைக்கவே பொரு-வஞ்சனையுடைய அரக்கர்களின் பெரிய தலைகள் பதைக்கவும் போர் புரிந்த, மயில் வீரா-மயில் மீது வரும் வீர மூர்த்தியே! அறத்தின் வாழ் |