பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 323

 

உமை-அறங்களை வளர்த்து வாழ்கின்ற, உமாதேவிசிறக்கவே-மகிழும்படி, அறுமுகத்தினோடு-ஆறுமுகங்கள் விளங்க, அணிகுறத்தி ஆனையோடு-அழகிய வள்ளியுடனும் தெய்வ யானையுடனும், அருக்கொணமலை-அருக்கொணாமலை யென்ற தலத்தில், தருக்கு உலாவிய-களிப்புடன் உலாவுகின்ற, பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! தொடுத்தவாள் என விழித்து-செலுத்தப்பட்ட வாளாயுதம் என்று சொல்லும்டிப பார்த்து, மார் முலை அசைத்து-மார்பிலுள்ள தனங்களை அசைத்து, மேகலை மறைத்து மூடிகள்-மேலையினால் உடம்பை மறைத்து மூடும் மாதர்கள்; துடித்து-அன்புடையவர்கள் போல் துடித்து, நேர்கலை நெகிழ்ந்து-எதிரே ஆடையைத் தளர்த்தி, ம இயல் கொள்ளும் மாதர்-நல்லொழுக்கத்தைப் பறிகொள்ளுமாதர்கள், சுகித்து அஹா என நகைத்து-சுகத்தை அனுபவித்து, அஹா என்று நகை செய்து, மேல்விழ-மேலே விழ, முடித்த வார்குழல் விரித்து-முடித்திருந்த நீண்ட கூந்தலை விரித்து, இதழ் துவர்க்க வாய் சுருள் அடக்கி-இதழ் சிவக்கும்படி வாயில் வெற்றிலைச் சுருள் அடக்கி, மால் கொடு வழியே போய்-காம ஆசையைக் கொடுக்கின்ற வழியிலே போய், படுத்த பாயலில் அணைத்து - படுத்தபடுக்கையில் தழுவி, மாமுலை பிடித்து-பெரிய தனங்களைப் பற்றி, மார்பொடும் அழுத்தி-மார்பினில் அழுத்தி, வாய் இதழ் குடித்து-வாய் அதரத்தைப் பருகி, நாணம் அது அழித்த பாவிகள்- நாணத்தை அழித்த பாவிகளாகிய, பொது மாதர்களின், வலையாலே- வலையினாலே; நோய் பிணி பலித்து-நோய்களும் பிணிகளும் உண்டாகி, கிடந்து பாய் மிசை வெளுத்து-பாயில் கிடந்து உடல் வெளுத்து, வாய்களும் மலர்த்தின் நாய் என ஆக, பசித்து தாகமும்-பசியுந்தாகமும் உற்றும், எடுத்திடா உயிர் உழல்வேனோ-எடுத்திட்ட உயிருடன் திரிவேனோ?

பொழிப்புரை

கோபத்தால்வெடுவெடுத்து வந்த தாடகையின் கோபத்தை ஓர் அம்புவிடுத்து அடக்கியும், யாகத்தை நடத்தியும், ஒப்பற்ற-சிறந்த நீண்ட வில்லை எடுத்தவருமான திருமாலின் திருமருகரே! உலகத்தைச் சிருட்டித்து, இந்த பூமியைத் தந்த பிரமதேவனை நடுங்க வைத்து, அவனுடைய தலையைக் கிள்ளி கரத்தில் வைத்து, நெற்றிக் கண்ணால் பார்த்து மன்மதனை யெரித்த தந்தையாகிய சிவபெருமானுடைய குருநாதரே! நெருங்கியுள்ள ஆயிரம் விடப்பணாமகுடங்களைக் கொண்ட ஆதிசேடன் நடுக்க முறவும், கிரவுஞ்ச மலை பிளந்து தூளாகவும், வுஞ்சக அரக்கர்களின் பெரிய தலைகள், பதைக்கவும் போர் புரிந்த மயில் வீரரே! அறங்களை வளர்த்து வாழ்கின்ற உமாதேவி மகிழுமாறு, ஆறுமுகங்கள் விளங்க, அழகிய வள்ளியுடனும் தேவயானை