யுடனும், அருக்கொணா மலையில் மகிழ்ச்சியுடன் உலாவுகின்ற பெருமிதமுடையவரே! செலுத்திய வாளாயுதம் போன்ற கண்களை விழித்துப் பார்த்து மார்பிலுள்ள தனங்களை அசைத்து, மேகலையால் உடம்பை மறைத்து மூடும் மாதர்கள், துடித்து, எதிரே புடைவையைத் தளர்த்தி, நல்லொழுக்கத்தைப் பறி கொள்கின்ற மாதர்கள், இன்பவதை அநுபவித்து ‘அஹா‘ என்று நகைசெய்து மேலே விழ, முடித்திருந்த கூந்தலை விரித்து, இதழ் சிவக்கும்படி வாயில் வெற்றிலைச் சுருளை அடக்கிஆசையைத் தருகின்ற அந்த வழியிலே போய்ப் படுத்த படுக்கையில் தழுவி, பெரிய தனங்களைப் பிடித்து, மார்புடன் அழுத்தி, அதரபானஞ் செய்து, நாணத்தை அழித்த பொது மாதர்களின் வலையால், உண்டான நோய்களால் படுக்கையில் கிடந்து உடல் வெளுத்து, மலந்தின்னும் நாய்போல் வாயைப் பிளந்து, பசி தாகம் அடைந்து, எடுத்திட்ட உயிருடன் அடியேன் திரிவேனோ? விரிவுரை தொடுத்த வாளென விழித்து:- பொது மாதர்களின் கண்கள் வாள்போல் இளைஞர்களின் உள்ளத்தை வெட்டிப் பிளக்கும் வன்மையுடையது. வெடுத்த தாடகை:- கோபத்தால்கொதித்து வெடு வெடு என்று வேகத்துடன் வந்த தாடகையை ஒரு கணையால் இராம் கொன்றருளினார். சொல்லொக்குங்கடிய வேகச் சுடுசரம் கரிய செம்மல் அல்லொக்கும நிறத்தினாள் மேல் விடுதலும் வயிரத் குன்றக் கல்லொக்கும் நெஞ்சிற்றங்காது அப்புறங்கழன்று கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்னபொருளெனப் போயிற்றன்றே. - கம்பர் யாகமும் நடத்தி:- விச்வாமித்திரர் புரிந்த தவ வேள்வியை, மாரீசன் தாடகை முதலிய அரக்கர்கள் பன்னெடுங்காலமாகத் தடுத்துக் கெடுத்து வந்தார்கள். ஸ்ரீராமர், தாடைகையையும், சுபாகுவையும், வதைத்தும், மாரீசனைக் கடலில் வீழ்த்தியும் வேள்விக்காவல் செய்து, முடித்துக் கொடுத்தார். எண்ணுதற் காக்கரீக திரண்டு மூன்றுநாள் விண்ணவர்க காக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற இமையில் காத்தனர் - கம்பர் |