பக்கம் எண் :


326 திருப்புகழ் விரிவுரை

 

கருத்துரை

அருக்கெணாமலையண்ணலே! மாதராசையால் துன்புற்று உயிர் உழல்வேனோ?

திருக்கோணமலை

198

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையி மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ  மயலூறி
மிகுத்த காமிய னெனப்பாரு ளோதெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்பதாகிய யுழைத்தேவி டாய்படு கொடியேனைக்
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசையு மொருவாழ்வே
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
முரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் தரவேணும்
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் தருவேளே
வசிட்டர்காசிபர் தவத்தான யோகியர்
அகத்திய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு முருகோனே
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கெ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே